பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



7. ‘கீதாஞ்சலி’ நூலுக்கு
நோபெல் பரிசு!

அரசியலை விட்டு விலகிய கவிஞர் தாகூர், இலக்கிய வெறியோடு ‘கீதாஞ்சலி’ என்ற உள்ளொளி நூலை எழுதினார். ஆனால், அதைத் தன் தாய்மொழியான வங்காள மொழியில் தான் எழுதினார். அதனால், அதை வங்கப் பேரறிஞர்கள் மட்டுமே பாராட்டும் நிலையேற்பட்டது.

தன்னுடைய உடல் நலக் குறைவினால் கிராமம் ஒன்றிற்குச் சென்றார்! உடல் சுகமானதும் சில நாட்கள் ஓய்வெடுத்தார். அந்த நேரத்தில் ‘கீதாஞ்சலி’ நூலை ஆங்கில மொழியிலே மொழி பெயர்த்தார். பொழுது போக்கிற்காக செய்த இந்த மொழி மாற்றப் பணி, அவருடைய புகழை உலக மெல்லாம் பரப்பியது. பொருளாதாரத்தில் நொடிந்து போயிருந்த அவரது வாழ்க்கை அந்த மொழி பெயர்ப்பால் நன்மை பெற்றது; புகழைத் தேடித் தந்தது; உலக அறிஞர்கள் கவிஞர் தாகூரை வானளவாகப் புகழ்ந்து போற்றினார்கள். அவரை அறிவுலகம் தேடிவந்து அணைத்துக் கொண்டது. ஆரத்தழுவி மகிழ்ந்தது.

கவிஞர் தாகூர் 1912-ஆம் ஆண்டில் லண்டன் மாநகர் சென்றார். அப்போது ரோதென்ஸ்டின் என்ற பழைய நண்பரைக் கவிஞர் கண்டார். அந்த நண்பர் ஒரு முறை சாந்தி