பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


நிலையிலே உள்ளன. அதற்கு அவர்கள், அவரவர் நாடுகளைத் தற்காத்துக் கொள்ளவே படை திரட்டுகிறோம், பெருக்குகிறோம் என்று பேசுகிறார்கள். அழிவு வேலையில் போட்டியும்-பொறாமையும் வளர்வது நாகரிகமாகாது என்பதை அவர் தெளிவாகவே அந்தந்த நாட்டு அறிஞர்களுடன் பேசும்போது சுட்டிக் காட்டினார்.

கவிஞர் தாகூர் இந்தியா திரும்பி வந்ததும், அவருக்கு நடந்த பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு பேசும் போது மேற்கண்ட கருத்தைக் கூறியதுடன் நில்லாமல், உருவாகும் போர் மயக்கத்தை வேரறுக்க இந்திய நாடுதான் வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தாகூருடைய ஆங்கில நண்பர்களான ஆண்ட்ரூஸ், பியர்சன் என்ற இருவரும் 1914-ஆம் ஆண்டு சாந்தி நிகேதனுக்கு தொண்டாற்ற வந்து சேர்ந்தார்கள்.இவர்கள் சாந்திநிகேதனுக்கு வந்துள்ளதால், இவர்கள் சேவை உலக அமைதிக்கு உதவும் என்று தாகூர் மகிழ்ந்தார். அதுபோலவே, அவர்களுடைய தொண்டுகளால் 1915-ஆம் ஆண்டு தென்னாப்ரிக்க நாடுகளுடன் சாந்திநிகேனுக்கு தொடர்பு உருவானது. தென்னாப்ரிக்காவில் காந்தியண்ணல் ஏற்படுத்திய போனிக்ஸ் பள்ளியின் மாணவர்கள், இந்தியாவிற்கு வந்து சாந்திநிகேதனில் தங்கியிருந்தார்கள். அப்போதுதான், மகாத்மா காந்தியடிகள் சாந்திநிகேனுக்கு வருகை தந்தார்.

கவிஞர் தாகூரும் கூடி அளவளாவிய முதல் கூட்டம் சாந்தி நிகேதன் சந்திப்பாகும். இதற்குப் பிறகுதான். சாந்திநிகேதன் புகழ் உலக அறிஞர்களைக் கவர்ந்தது. தாகூரும் அரசியல் உலகை அறவே மறந்து சாந்திநிகேதன் தொண்டிலே மும்முரமாக ஈடுபட்டார்.