பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

85


உள்ளத்திலுள்ள அழகுணர்ச்சியைப் பாராட்டினார். சீனர்களிடம் ஜப்பானியர் நடந்து கொள்ளும் மனப்போக்கை எதிர்த்தார். டோக்கியோ பல்கலைக் கழகத்தில் அவர் பேசிய நாட்டுணர்ச்சி உரைகள் நூல்வடிவில் வெளிவந்தன. அது பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியது.

தேசபக்தி என்ற முகமூடியை அணிந்துகொண்டு நாட்டுக்குச் செய்யும் துரோகத்தனங்களையும், நாட்டு முன்னேற்றத்தை நினையாமல், கேடு பயக்கும் தவறான உணர்ச்சிகளையும் அந்த நூல் சுட்டிக் காட்டியது. ஜப்பான் சென்ற கவிஞர் தாகூர், அவர்கள் நாட்டிலேயே அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டியதால், ஜப்பானியர்களும், அந்த நாட்டு அரசும் அவரை எதிர்த்தனர். அதனால் கவிஞர் தாகூர் தனத பயணத்தை விரைந்து முடித்துக் கொண்டு இந்தியா வந்தார்.

‘சர்’ பட்டத்தை தூக்கி எறிந்தார்!

கவிஞர் தாகூரின் மூத்த மகன், 1918-ஆம் ஆண்டில் மரணமடைந்ததால், தாகூர் பெரும் துயரடைந்தார் சிறிது காலம் எப்பணியிலும் ஈடுபடாமல் மெளனமாகவே இருந்தார்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் நகரருகே, வெள்ளையர் ஆட்சியின் ராணுவ தளபதிகளுள் ஒருவரான ஜெனரல் டயர் என்பன், ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தினான்! அமைதியாகக் கூட்டம் கேட்கக் கூடியிருந்த நிராயுதபாணிகளான பொதுமக்களை, பீரங்கியிலே குண்டுகள் உள்ளவரை, சிட்டுக்குருவிகளைச் சுட்டுத் தள்ளுவதைப் போல கொடூரமாகச் சுட்டுக் கொன்றான் என்பதை அறிந்து கவிஞர் பெருமகன் தாகூர் மீளாத்துன்பமுற்றார்.