பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



வேங்கை ஒன்று கூண்டை உடைத்து வெளியேறுவது போல, கவிஞர் தாகூர் சாந்திநிகேதனை விட்டு வெளியேறி கல்கத்தா நகரையடைந்தார். தனது எதிர்ப்புணர்ச்சியை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார். கூட்டம் போட்டுக் கண்டனம் தெரிவிக்க மக்களைத் திரட்டினார். ஆனால், அரசியல் தலைவர்கள் எல்லாரும் அப்போது அஞ்சினார்கள். ஆனால் நெருப்பு வெப்பம் போல் கோபம் கனன்றதால், தான் மட்டுமே தனியாக நின்று தனது எதிர்ப்பைப் பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்.

இந்திய வைசிராய்க்கு உடனே கடிதம் எழுதி, தனக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அளித்த ‘சர்’ பட்டத்தை-ஜெனரல் டயர் செய்த மக்கள் கொடுமையை எதிர்த்துத் தூக்கி எறிகிறேன் என்று அவர் தெரிவித்தார். இந்தியன் என்ற உணர்ச்சியோடு மட்டுமன்று, நானும் ஒரு மனிதன் என்ற உணர்ச்சியால், வெள்ளையரின் கொடுமையான ஆட்சியைக் கண்டிக்கின்றேன் என்று அவர் உலகமறிய அறிக்கைவிட்டுக் கண்டித்தார். வெள்ளையர் வழங்கிய பட்டத்தை இனியும் நான் சுமந்தால், அது மனிதாபிமானத்துக்கே பெரும் அவமானம் என்றும் தாகூர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ நிகேதன் உருவானது!

எப்போதுமே கவிஞர் தாகூருக்கு, கிராம மக்கள் மீதும், கிராமத் தொண்டுகள் மேலும் ஒரு வித பாச உணர்ச்சி உண்டு. அதை நன்கு புரிந்து கொண்ட கவிஞரின் மூத்த மகன், தனது தந்தையார் தாகூரை அமெரிக்காவிற்கு அனுப்பி கிராம முன்னேற்றம் பற்றி அறியச் செய்தார். தாகூருடன் எல்மிர்ஸ்ட்