பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

95ஒரு கடிதம், சாதனா பத்திரிகையின் கடைசி இதழ், இன்னும் சில அச்சுத் தாள்கள் ஆகியவை வந்தன. கடிதத்தைப் படித்தேன். சாதானாவின் கிழிக்கப் படாத பக்கங்களுக்குள் பார்த்தேன். மறுபடியும் தலை அசைத்துக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும், பாட்டு எழுதத் தொடங்கினேன். அதை முடிக்கும் வரைக்கும் நான் வேறு எதுவும் செய்யவில்லை.

பக்கம் பக்கமாக உரை நடை எழுதிய போதிலும், அது ஒரு பாட்டு எழுதுவதற்கு இணையான மகிழ்ச்சியைத் தருவதில்லை. என்ன காரணமோ? ஆச்சரியமாக இருக்கிறது. எழுதுகின்ற பாட்டில் ஒருவரது உணர்ச்சிகள் அப்படிப்பட்ட மேன்மையான உருவம் பெறுகின்றன.

கைவிரல்களால் தொட்டு எடுக்கக் கூடியவை போல் அவைகள் அமைகின்றன. ஆனால், உரை நடை என்பது ஒட்டாத பொருள்களை ஒரு கோணிப்பை நிறைய அடைத்திருப்பது போல் கனவாகவும், கையாள முடியாததாகவும், விருப்பம் போல் அசைக்க முடியாததாகவும் இருக்கின்றது.

தினந்தோறும் ஒரு பாட்டு எழுத முடியுமானால், என் வாழ்வு ஒருவகை இன்பமாகவே இருக்கும். ஆனால், பல ஆண்டுகளாக நான் தொடர்ந்து பாட்டோடு பழகியும், எனக்கு அது நன்கு பழக்கப் பட்டதாக ஆகவில்லை. கடிவாளம் இட்டு என் விருப்பம் போல் ஏறிப் போகக் கூடிய பறக்கும் குதிரையாக அது அமையவில்லை.

கற்பனைக்கு ஏற்றவாறு தொலைவில் பறந்து செல்லும் உரிமையில்தான் கலையின் இன்பம் அமைந்திருக்கிறது.