பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


அதற்குப் பிறகு, இந்த உலகச் சிறைக்குள் திரும்பிப் புகுந்த பிறகும் அந்த இன்பம் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. மனத்திலும் ஊறிக்கொண்டிருக்கிறது.

சிறு சிறு பாட்டுகள், தாமாகவே நான் முயற்சி செய்யாமலே, என்னிடம் வந்து அமைகின்றன; நாடகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அவை தடையாக வந்து சேர்கின்றன. இந்தப் பாட்டுக்கள் குறுக்கே வராமலிருந்தால், என் மனத்தில் வந்து தூண்டும் இரண்டு மூன்று நாடகத்திற்குரிய கருத்துக்களுக்கு வரவேற்பு கொடுத்திருப்பேன்.

ஆனால், குளிர்காலம் வரும் வரையில் காத்திருக்க வேண்டுமோ என அஞ்சுகிறேன். ‘சித்ரா’ தவிர, எல்லா நாடகங்களையும் குளிர் காலத்தில் தான் எழுதி முடித்திருக்கிறேன். அக்காலத்தில் பாட்டுக்குரிய உணர்ச்சி குளிர்ந்து விடும் போல் தெரிகிறது. அதனால்தான் அப்போது நாடகம் எழுத ஓய்வு கிடைக்கிறது போலும்"

(1892, மே, 16-ஆம் நாள் போல்பூரிலிருந்து எழுதிய கடிதம்)

நாடகத் தொண்டு

நாடகக் கலைக்கு கவிஞர் தாகூர் ஆற்றிய தொண்டு எவராலும் மறக்க முடியாதது. கவிஞர் சிறுவராக இருந்தபோது தேவேந்திர நாத் குடும்பம் ஒரு கலைக் குடும்பமாகவே காட்சியளிக்கும் ரவீந்திரர் அண்ணன்கள், அண்ணிகள், தாய், தந்தை அனைவருமே தங்களது வீட்டில் நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவர் மட்டும் பார்க்க அனுமதி கிடைக்காது. நாடகம் பார்த்தால் கெட்டுப்போவாய், போ-போ,