பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


‘கவியின் கனவு’ கதையின் வடிவம் கலைமாமணி எஸ்.டி. சுந்தரம் (00 பெரும் இலட்சியத்தின் மானிட வடிவம் மகாகவி ஆனந்தன். மாந்தருக்குள் ஒரு தேவனாய் வாழ்ந்து வந்தவன். காலஞ்சென்ற அரசர் ஆத்மநாதரின் அருமை நண்பன். நாட்டு மக்கள் அன்புடன் போற்றிய கலை மன்னன். மகா கவிஞன். தத்துவ ஞானி. தற்போது நாட்டின் அரசியல் நிர்வாகம், காலஞ்சென்ற மன்னன் ஆத்மநாதனது தம்பி வீரசிம்மனிடம் அகப்பட்டுக் கொண்டிருந்தது. х மன்னன் வீரசிம்மனும், மகாராணி ஊர்வசியும் தன்னலக் காரர்கள். இந்த ஊர்வசி சாமான்யமானவள் அல்ல. ஒரு காலத்தில் உலகம் போற்றிய கலையரசி, விலையரசியாகவும் இருந்த எழிற் சிலை அவள் மகாகவி ஆனந்தனிடமும் சில நாட்கள் கலைப் பயிற்சி பெற்றவள்! ஒரு காலத்தில் கவிஞன் மேல் ஆசைப்பட்டு, அந்த ஆசை நிறைவேறாமல் தோல்வி கண்டவள். அந்தத் தோல்வியில் விளைந்த வெறுப்பால், கவிஞனின் உயிர்க்குயிராக விளங்கிய அவனது துணைவி வாணியை வாணியாற்றிலே தனது சூழ்ச்சித் திறனால் மடியச் செய்தவள். உலகமுள்ள நாள் வரைக்கும் மெய்ப்பிக்க முடியாத அளவு சூழ்ச்சித் திறம் படைத்த ஊர்வசி செய்த அந்தப் படுகொலையை, கடைசிக் காலத்தில் அவளது உள் மனத்தின் ஆழத்திலே ஒண்டி உறங்கிய, ஒளியின் நிழலே காட்டிக் கொடுத்து விடுகின்றது தனது மன வேட்கையைப் பதவி வெறியாக மாற்றிக் கொண்டு, நாட்டின் அரசன் வீரசிம்மனைத் தன் கைப்பாவையாக்கி, தற்போது நாட்டின் மகாராணியாக விளங்கும் சாமர்த்தியக்காரி! அரசனும் அரசியும் நாட்டின் நிர்வாகப் பொறுப்பை சர்வாதிகாரி