பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கவியின் கனவு கனி கனி சுகதே கனி மாரியின் மோக வலையில் வீழ்ந்துவிட்டான். பார்த்தீர்களா! ஆனால், இதெல்லாம் அந்தப் பரதேசி சர்வாதிகாரியின் மோச வலையென்பதை அவனுக்கு யார் அறிவிக்கப் போகிறார்கள்? உம் சரி, தாங்கள் சென்று இளைப்பாறுங்கள். பிறகு சந்திப்போம்! (கருணாலயர் ஒருபுறம் போக, சுகதேவன் தன் பாசறைக்குள் இளைப்பாறச் செல்லன் மற்றொரு பாசறையிலிருந்து கனிமொழி கையில் சித்திரப் பலகையும், வண்ணத் துரிகையுமேந்தி ஆடும் சிலையென வந்து) - அண்ணா வரவர ரொம்ப நேரமாகத் துரங்கி விடுகிறார். பாவம்! அவரும் எத்தனை பணி களைத் தான் கவனிப்பது? சரி, இதுதான் சமயம். அவரது உருவத்தை எழுதி முடித்து விடுவோம். (அன்புப் பாட்டுடன் மணிவண்ணன் - சாத்தி இருவர் உருவங்களையும் எழுதிப் பிறகு). சாந்தியின் முகம் நன்றாய் அமைந்துவிட்டது. மணிவண்ணருடைய முகம் சரியாக அமைய வில்லையே..! மஞ்சள் வண்ணம் அதிகமாகி விட்டதோ! கொஞ்சம் சிவப்பு கலக்கலாமா..? அப்பா. அவர் முகம் தாமரை மலரைப் போலல்லவா இருக்கும். பின்புறம் வந்து நின்று பார்த்த சுகதேவன் இரக்கத்துடன், கனிமொழி! இனி நீ எந்த வண்ணத்தைச் சேர்த் தாலும் மணிவண்ணனது உருவத்தை அழகு படுத்துவதென்பது இயலாத காரியமம்மா. இல்லையண்ணா (படத்தை மறைத்து தான முடன் சாந்தியின் படத்தைத்தான் வரைந்தேன்!