பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ்.டி. சுந்தரம் 187 ”حساسے சர்வா மக்கள் : சர்வா கவி சுகதேவ் என்னை அவமானப்படுத்தியதாக எண்ணமா? மக்களே! சுகதேவ்தான் சூழ்ச்சிக் காரன். எல்லைப் போரிலே கோட்டை விட்ட வன். எதிரியை நண்பன் என்றவன். எதிரி எல்லையைப் பிடித்த போது இராணுவம் இவன் கையில்தானே இருந்தது. தோல்வி வரக்காரணம் என்ன? எதிரியிடம் கையூட்டு வாங்கி, நாட்டிலே எரியூட்டி விட்டான். - பேசாதே. அவரைப்பற்றி நாங்கள் அறிவோம். ஏமாற்றாதே. பொய்யை நம்பமாட்டோம். நம்பமாட்டீர்கள்! என்னை நம்பவும் புரிந்து கொள்ளவும் உங்களுக்கு அறிவு கிடையாது. நீங்கள் பழமையின் பாண்டங்கள்! பகுத்தறிவற்ற வர்கள்! இந்தக் கவிஞன் யார் தெரியுமா? இவன் ஒரு கள்வர் தலைவன். காலஞ்சென்ற இந் நாட்டுச் சக்கரவர்த்தி இந்நாட்டின் இரகசியப் பொக்கி ஷத்தை இவனிடத்தில்தான் ஒப்படைத் தான். இது இருக்குமிடம் இவன் ஒருவனுக்கு மட்டும் தெரியும். அதை அறிந்து கொள்ள வேண்டும் என்றுதான் இவனை இத்தனை ஆண்டு உயிருடன் காப்பாற்றி வைக்கச் சொன்னேன். (சிரிப்பு விதியின் கடைசி விளையாட்டு இது! மக்களே, இவர் கூறுவது பாதி உண்மைதான்! காலஞ்சென்ற மன்னர் வெறும் நவரத்தினப் பொக்கிஷத்தை மட்டுமல்ல, இந்த நாட்டை அருள் வழிப்படி ஆளவேண்டுமென்ற சமதர்ம்ச் செல்வமான புதிய ஆட்சி முறையையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். அதையும் உங்கள் முன்னிலை யில் படைக்கச் சித்தமா யிருக்கிறேன். எங்கள் மக்களுக்கு நாங்கள் பதில் சொல்லிக் கொள் வோம். இப்போது நீ எங்களுக்குப் பதில் சொல்லா மல் தப்ப முடியாது! சத்தியத்தை விழுங்க முடியாது அப்பனே! -