பக்கம்:கவி பாடலாம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முந்தைய பதிப்பின்

பதிப்புரை

தெய்வத் தமிழ்மொழி தொன்று தொட்டு நல்ல கவிதை வளம் பெற்றுச் சிறந்துள்ளது. இடையறாத தொடர்ச்சியான வரலாற்றினை உடைய தமிழ் மொழியில் அவ்வக்கால இயல்புகள், தன்மைகள் படிந் துள்ளன. இக்காலத்தில் கவிதை நூல்கள் பல எழுகின்றன. புதியதாகச் செய்யும் பணிகள் தமிழுக்கு நல்ல அணிகளாகத் திகழ வேண்டும். கவிதைகள் எண்ணிக்கையால் அளவால் பெருகி யுள்ளனவே தவிர தரத்தில் சிறப்புடையனவாகக் கூற முடியாது.

சிறந்த முறையில் கவிபாட நற்றுணை யாக அமைவது இந்நூல். தமிழின் தலைமைத் தொண்டர் உ.வே.சாமிநாத ஐயரின் முதன்மை மாணவர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் கவிபாடுவதற்குரிய வழிவகைகளை மிக விளக்கமாகக் கூறியுள்ளார்கள். வடிவங் களையும் அமைப்புக்களையும் உள்ளடக் கத்தையும் நல்ல கவிதையின் நலங்களையும் எடுத்துரைத்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/10&oldid=655686" இலிருந்து மீள்விக்கப்பட்டது