பக்கம்:கவி பாடலாம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தளை i. iS

இயற்சீர் வெண்டளை

வெண்சீர் வெண்டளை

நேரொன் றாசிரியத்தளை

- நிரையொன் றாசிரியத்தளை

கலித்தளை

ஒன்றிய வஞ்சித் தளை

ஒன்றாத வஞ்சித் தளை. ஈரசைச் சீர் நிற்க அமையும் தளைகள் மூன்று: (1), இயற்சீர் வெண்டளை, (2) நேரொன் றாசிரியத்தளை, (3) நிரையொன் றாசிரியத் தளை.

காய்ச்சீர் நிற்க அமையும் தளைகள் இரண்டு: (1) வெண்சீர் வெண்டளை, (2) கலித்தளை

கணிச்சீர் நிற்க வரும் தளைகள் இரண்டு: (1) ஒன்றிய வஞ்சித்தளை (2) ஒன்றாத வஞ்சித்தளை.

வேறு ஒரு வகையிலும் இவற்றைப் பிரித்துப் பார்க்கலாம்; ஒத்து வரும் தளைகள், ஒவ்வாது வரும் தளைகள் என்று பிரிக்கலாம். - -

ஒப்பன: (1) வெண்சீர் வெண்டளை, (2) நேரொன் றாசிரியத்தளை, (3) நிரையொன் றாசிரியத்தளை, (4) ஒன்றிய வஞ்சித்தளை.

ஒவ்வாதன: (1) இயற்சீர் வெண்டளை, (2) கலித்தளை, (3) ஒன்றாத வஞ்சித்தளை.

தளையைப் பற்றிய இலக்கணத்தைச் சொல்லும் யாப்பருங்கலக் காரிகைச் சூத்திரம் வருமாறு: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/120&oldid=655709" இலிருந்து மீள்விக்கப்பட்டது