பக்கம்:கவி பாடலாம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 கவி பாடலாம்

வண்ண மேவிய மாமயில் மேல்வரும் அண்ணல் வேற்கரத் தாறுமு கன்பதம் நண்ணி நாளும் நயந்து பணிந்தவர் எண்ணம் யாவும் இனிதுறும் என்பவே.

இப்பாட்டில் அடிதோறும் முதற்சீரில் எதுகை அமைந்தமையால் இது அடி எதுகை. செய்யுள் இயற்றுவார் அடி எதுகை அமையும்படி பாட வேண்டும். எல்லாப் புலவர்களுடைய பாட்டிலும் பெரும்பாலும் அடியெதுகை அமைந்திருப்பதைக் காணலாம். -

ஒரடிக்குள்ளே பல சீர்களில் அமையும் மோனை, எதுகைகள் இணை முதலியவையாகப் பெயர் பெறும். நான்கு சீர்களையுடைய பாட்டில் வரும் மோனை முதலிய தொடைகளுக்கே அதனதன் நிலைக்கு ஏற்பத் தனித்தனியே பெயர் அமைத்திருக்கிறார்கள். அவையே இணை முதல் முற்றுவரையுள்ள விகற்பங்கள்.

(1) இணை : முதல் இரண்டு சீர்களில் அமைவது.

“அனிமலர் அசோகின் தளிர்நலம் வென்று.”

இந்த ஆசிரியப்பாவின் அடியில் முதல் இரண்டு சீர்களில் மோனை வந்திருக்கிறது. இது இணை மோனை.

“பொன்னின் அன்ன பொறிசுணங் கேந்தி.” இந்த ஆசிரியப்பா அடியில், முதல் இரண்டு சீர்களில் எதுகை வந்தது. இது இணை எதுகை.

பாரதப் பண்பைத் தெரிந்துணர் அன்பர்கள் சீருறத் தேயம் ஓங்குதல் வேண்டிக் காந்தி கருத்தறிந் தெனைப்பல தொண்டை மாந்தர்கள் வாழுந் திறத்தினிற் செய்தனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/127&oldid=655719" இலிருந்து மீள்விக்கப்பட்டது