பக்கம்:கவி பாடலாம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனை எதுகைகளின் வகை 127

ஆங்கவர் ஆற்றிய செயலால் தீங்கெலாம் தீரப் பெற்றனம் யாமே.

இந்த நேரிசையாசிரியப் பாவில் அடி தோறும் இணை மோனை வந்தமை காண்க. இணை என்பது இரட்டைக்குப்

பெயர். முதல் இரண்டு சீர்களில் அடுத்தடுத்து வந்தமையால் இப்பெயர் பெற்றது.

(2) பொழிப்பு: முதற் சீரிலும் மூன்றாம் சீரிலும் அமைவது.

அம்பதும மாமலர் போல் அழகொழுகும் திருவடியை,

இதில் பொழிப்பு மோனை வந்தது.

அன்ன அம்பொற் சுடருரு.

இதில் பொழிப்பெதுகை வந்தது.

நான்கு சீருடைய பாடல்களில் பொழிப்பு மோனை வரும்படி பாடுவதே சிறப்பு. புலவர்களின் செய்யுட்களில் இந்த அமைதியைக் காணலாம். ஆசிரியப்பாவில் அடி

எதுகை வராதபோது பொழிப்பெதுகை அமையும்படி பாடுதல் சிறப்பு.

(3) ஒரூஉ: முதல் - சீரிலும் நான்காவது சீரிலும்

அமைவது.

அன்பருளம் மேவும் முருகன் அடிமலரே -

இந்த வெண்பா அடியில் ஒருஉ மோனை வந்தது,

செங்கமலத் தாளைத் தெரிசித்துப் பங்கமற்று.

இந்த வெள்ளடியில் ஒரூஉ எதுகை வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/128&oldid=655720" இலிருந்து மீள்விக்கப்பட்டது