பக்கம்:கவி பாடலாம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கவி பாடலாம்

கூடாரைக் கூடிக் குதர்க்கத்தில் நாள்போக்கிப் பாடறியேம் பெற்றேம்துன் பம்.

இந்தப் பாடலில் டு, டி,ட, டா, ட என்பன ஒன்றற் கொன்று எதுகையாக வந்தன. இது வருக்க எதுகை.

வருக்க மோனை: மேலே சொன்ன வகையில் மோனை அமைந்தால் அது வருக்க மோனையாம்.

பண்புறச் சொற்கள் பாங்காய் அமையப் பாடல் பாடும் பழக்கம் வேண்டும்; பிழையிலா தெழுதும் ஆற்றி ஆகின்றேல் பிடெங் கிருந்து பெறுதல் கூடும்? புதுமைக் கருத்தும் பொற்புறுகந்தமும் பூணும் அணியெனப் பொருந்தலங் காரமும் பெரியோர் போற்றும் அரிய கருத்தும் பேணி அமையப் பெட்புறும் கவிதை, பையப் பைய இயற்றிற் பனுவலைப் பொருத்த மாகவே பூர்த்திசெய் திடலாம்; போனக மனைய இனிமையும் பொருளிற் பெளவமென் ஆழமும் அமைந்து படருமே.

இந்தப் பாடலில் அடியின் முதலெழுத்துக்கள் பகர வருக்கமாகவே வந்திருத்தலின், இது பகர மெய் வருக்க

மோனை.

நெடில் எதுகை: “ஆவா எனவேங்கி அல்லாந்து சோகாத்துப்

பாகா யுருகிப் படர்ந்தார் சிலமாதம்.”

இதில் இரண்டாம் எழுத்துக்கள் நெடிலாக அமைந்தன. இது நெடில் எதுகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/131&oldid=655724" இலிருந்து மீள்விக்கப்பட்டது