பக்கம்:கவி பாடலாம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 - கவி பாடலாம்

“மந்தாநிலம் மருங்கசைப்ப

வெண்சாமரை புடைபெயர்தரச் செந்தாமரை நாண்மலர்மிசை

எனவாங் கினிதின் ஒதுங்கிய இறைவனை மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே.”

8. வெண்பா இனம்

பாக்கள் நான்கு வகை என்றும் அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்றும் பாவினங்கள் துறை, தாழிசை, விருத்தம் என மூவகைப்படும் என்றும் முன்பு கண்டோம். வெண்பாவின் வகைகளாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா ஆகியவற்றின் இலக்கணத்தை முதல் பாகத்தில் அன்பர்கள் அறிந்திருப்பார்கள். -

வெண்பாவின் இனங்களைப் பற்றி இப்போது கவனிக்கலாம். குறள் வெண்பாவுக்குக் குறள் வெண் செந்துறை, குறள் தாழிசை என்று இரண்டு இனங்கள் உண்டு.

குறள் வெண் செந்துறை இரண்டு அடிகளாய் அளவு ஒத்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் சிறந்த உறுதிப் பொருள்களைப் பற்றி

வருவது குறள்வெண்செந்துறை. இதை வெண் செந்துறை என்றும் கூறுவது உண்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/153&oldid=655748" இலிருந்து மீள்விக்கப்பட்டது