பக்கம்:கவி பாடலாம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கவி பாடலாம்

தான் கவி எழுத முடியும். இலக்கணம் தெரிந்திருந்தால் போதாது; இலக்கியமாகிய பாட்டின் ஓசை காதில் விழுந்து பழகியிருக்க வேண்டும்.

சிலருக்குச் சங்கீதத்தை அநுபவிக்க நன்றாகத் தெரியும். இது இன்ன ராகம் என்பதும் தெரியும். ஆனால் அந்த ராகத்தின் ஆரோகண அவரோகண சுவரம் தெரியாது. அபசுவரம் வந்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். இது கேட்டுக் கேட்டு உண்டான பழக்கத்தால் வருவது. பெரும் பாலும் சங்கீதத்தில் ஆர்வமும், பின்பு பாடும் பழக்கமும் உண்டாவதே இப்படித்தான். பிறகே லட்சண வித்துவான் ஆகிறார்கள்.

கவியையும் கேட்டுக் கேட்டு, வாயாரப் பாடிப் பாடி ஓசையுணர வேண்டும். இப்படிக் கேட்ட பழக்கத்தால் சிலர் விருத்தம் முதலிய சில கவிதைகளைப் பாடு வார்கள். இலக்கணம் கேட்டால் தெரியாது. எதுகை, மோனை இரண்டையும் தெரிந்து கொண்டு பழக்கத்தினால் ஒசையையும் தெரிந்து கொண்டு பாடுவார்கள். பாட்டு, பிழை இல்லாமல் இருக்கும். ராகம் சட்டென்று நினைவுக்கு வர அந்த ராகத்தில் அமைந்த கீர்த்தனையை நினைத்துக் கொள்வது, முறைப்படி சங்கீத சிட்சை இல்லாதவர்களுக்கு வழக்கம். அது போல இலக்கணம் தெரியாவிட்டாலும், ஏதாவது ஒரு பழம் பாட்டை ஓசையோடு பாடத் தெரிந்து கொண்டு, அந்த மெட்டில் தாமே பாடுகிறவர்கள் சிலர்.

இவ்வளவும் எதற்காகச் சொன்னேன் என்றால், கவிதையின் உருவம் அதன் ஒசையில் இருக்கிறதென்றும், பழம் பாடல்களை வாயாரப் பாடிப் பாடி அந்த ஓசையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்து வதற்காகத்தான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/17&oldid=655766" இலிருந்து மீள்விக்கப்பட்டது