பக்கம்:கவி பாடலாம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தக் கட்டுரைகள் 15

உருவம் ஒசையினால் அமைவது. சாகித்தியத்தைப் பற்றிக் கவனிக்காமலே சங்கீதத்தை ஒரளவு அதுபவிக்க முடியும். ராக தாளங்களின் அழகை உணர்ந்து நுகரலாம். அது போலவே கவிதையின் பொருளைக் கவனிக்காமலே, அது கவிதைக்குரிய இன்னோசையை உடையது என்று சொல்லி விடலாம். இதையே ஆங்கிலத்தில் (Rhythm) ரிதம் என்று சொல்வார்கள்.

தமிழ்க் கவிதை இசையோடு கலந்தது. பேசும் போது நாம் சொற்களை விட்டு விட்டுப் பேசுகிறோம். சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையிலே ஒலித் தொடர்பு இல்லாமல் அற்றுப் போகிறது. தவளை விட்டு விட்டுக் கத்துகிறதே, அதை அரிக் குரல் என்பார்கள். விடாமல் ஒலித் தொடர்போடு வரும் குரல் இழுமென்குரல். சங்கீதத்தில் இழுமென் ஒலி வேண்டும். இடையிலே விட்டாலும் அந்த இழுமென்னும் இயல்பு மாறாமல் இருப்பதற்குச் சுருதி வைத்துக் கொள்கிறார்கள்.

சுருதி இல்லாமல் பாடினாலும் அந்தக் குரலிலே ஒரு சுருதி இழையோடும்; அதுதான் இசையின் சிறப்பு. அது போன்ற இழுமென்ற ஓசை தமிழ்க் கவிதைக்கு உண்டு.

ஆகையால் தமிழ்க் கவிதையை வாய்விட்டுப் பாடி அதன் ஓசை நயத்தை உணர வேண்டும். தமிழ்க் கவியைப் படித்துப் பார்த்தால் அதன் பொருளையும், பிற அழகு களையும் உணரலாம்; ஆனால் ஒசையின்பத்தைத் தெளிவாக உணரமுடியாது. தமிழில் கவி பாட வேண்டுமென்று முயல் கிறவர்கள் பாட்டைப் பாடிப் பழக வேண்டும் ஒவ்வொரு பாட்டுக்கும் தனியே ஓர் ஓசை அமைதி இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பல பாடல்களைப் படித்துப் படித்து வாய்விட்டுப் பாடி அந்தப் பழக்கம் மிகுதியானால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/16&oldid=655755" இலிருந்து மீள்விக்கப்பட்டது