பக்கம்:கவி பாடலாம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொச்சகக் கலிப்பா வகை 179

தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்று வந்த தரவு கொச்சகக் கலிப்பாவுக்கு உதாரணம் வருமாறு:

“குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்

தடநிலைய பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தொன்றப்போய்க் கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப எனவாங்கு ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே.”

இந்தப் பாட்டில் நாற்சீரடியாகிய அளவடிகள் நான்கு முன்பும், பிறகு தனிச் சொல்லும், ஆசிரியச் சுரிதகமும் வந்திருப்பது காண்க.

தரவினைக் கொச்சகக் கலிப்பா

இரண்டு தரவுகளும், அவற்றில் இடையிலும் பின்னும் தனிச் சொல்லும், இறுதியில் சுரிதகமும் உடைய தாகி வருவது தரவினைக் கொச்சகக் கலிப்பா. இணை என்பது இரண்டைக் குறிப்பது.

“வடிவுடை நெடுமுடி

வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க்

காவலர்க்கும் காவலனாம் கொடிபடு மணிமாடக்

கூடலார் கோமானே!

எனவாங்கு துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் தொடர்ப்புண்டாங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/180&oldid=655778" இலிருந்து மீள்விக்கப்பட்டது