உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவி பாடலாம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கொச்சகக் கலிப்பா வகை

கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். அவை தரவு கொச்சகக் கலிப்பா, தரவினைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்பன.

தரவு கொச்சகக் கலிப்பா

ஒத்தாழிசைக் கலிப்பாவில் வரும் தரவு என்னும் உறுப்பு மட்டும் தனியாக வந்தாலும், அதனோடு தனிச் சொல்லும் சுரிதகமும் சேர்ந்து வந்தாலும் அது தரவு கொச்சகக் கலிப்பா ஆகும்.

‘தினைத்தனை உள்ளதோர்:

பூவினில்தேன் உண்ணாதே

நினைத்தொறும் காண்டொறும்பே

சுந்தொறும் எப்பொழுதும்

அனைத்தெலும் புண்ணெக

ஆனந்தத் தேன்சொரியும்

குனிப்புடை யானுக்கே

சென்றுதாய்க் கோத்தும்.பீ.”

இது நாற் சீருடைய நான்கடியால் வந்த தரவு கொச்சகக் கலிப்பா. கவிஞர்கள் நான்கடிகளால் பாடுவதே பெருவழக்காக இருக்கிறது. திருவாசகத்தில் உள்ள திரு வெம்பாவை முதலியன எட்டடிகளால் வந்த தரவு கொச்சகக் கலிப்பாக்கள். காய்ச் சீரும் விளச் சீரும் விரவி வருவது இது. கலித்தளையும் வெண்டளையும் சிறு பான்மை நிரையொன்றாசிரியத் தளையும் கலந்து வரும். மாச்சீர் வந்தால் இயற்சீர் வெண்டளை அமையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/179&oldid=655776" இலிருந்து மீள்விக்கப்பட்டது