பக்கம்:கவி பாடலாம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வஞ்சிப்பாவும் இனமும்

1ெஞ்சிப்பா இரண்டு வகைப்படும். குறளடி வஞ்சிப்பா என்பது ஒன்று; மற்றொன்று சிந்தடி வஞ்சிப்பா, இந்த இருவகை வஞ்சிப்பாவும் வஞ்சியடிகள் வந்து அப்பால் தனிச் சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று வரும். குறளடி என்பது இருசீரடி.

வஞ்சிப்பா இரண்டு சீரடிகளால் வந்து, தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது குறளடி வஞ்சிப்பா. சிந்தடி என்பது முச்சீரடி. மூன்று சீர்களையுடைய அடிகளால் வந்து தனிச் சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்று முடிவது சிந்தடி வஞ்சிப்பா. -

“பூந்தாமரைப் போதலமரத்

தேம்புனலிடை மீன்றிரிதரும் வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மன்ைச்சிலம்பிய மனமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும்

நாளும்

மகிழ மகிழ்துங் கூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே.”

இது குறளடி வஞ்சிப்பா. இதில் இருசீரடிகள் ஆறு முதலில் வந்து, பின்பு நாளும் என்ற தனிச்சொல் வந்து, அப்பால் இரண்டு ஆசிரிய அடிகளால் சுரிதகம் வந்தது காண்க. முன் ஆறு அடிகளில் வஞ்சிச் சீர்கள் வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/201&oldid=655801" இலிருந்து மீள்விக்கப்பட்டது