பக்கம்:கவி பாடலாம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230


24.

26.

27.

கவி பாடலாம்

‘ய’ கரத்தைத் தவிர மற்றவை தமிழில் மொழிக்கு முதலாவதில்லை. ர,ல இரண்டும் இந்தக் காலத்தில் மொழிக்கு முதலில் வருகின்றன, ரம்பம், லட்சம் என்பவை போல், ய, ர, ல என்ற மூன்றுக்கும் இ, ஈ,எ,ஏ (உயிரெழுத்து) மோனையாக வரும்.

யானைதன் துதிக்கை நீட்டி எடுத்ததைக் கண்டு நின்றான்

ராமனைத் தொழுத பின்னர் இன்னலொன் றேனும் உண்டோ?

லட்சமே கூட்டி னாலும் இலையெனும் லோபி கண்டாய்

என்பவற்றில் மோனை அமைந்தமை காண்க.

தொடை, மோனை என்பவை ஒரு பொருளைக் குறிக்கும் சொற்களா?

அல்ல. தொடைகள் பல. அவற்றில் ஒன்று மோனை.

இணைக்குறள், நேரிசை ஆசிரியப்பாக்களில் எங்கெங்கே மோனை அமைவது எழில்?

மூன்றாம் சீரில்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்துக்கு மோனை எங்கு அமைந்தால் சிறப்பு? ஐந்தாவது சீரில். .

“மங்கை நல்லவர் கண்ணும் மனமும்போன்

றெங்கு நாடி யிடருஞ் சுரும்புகாள் வண்டு காள்மகிழ் தேனினங் காள்மது வுண்டு தேக்கிடும் ஒண்ஞமி lட்டங்காள்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/231&oldid=655835" இலிருந்து மீள்விக்கப்பட்டது