பக்கம்:கவி பாடலாம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினாவிடைகள் 229

18. மாச்சீர் என்றாலே நேரசையை ஈறாகக் கொண்டு வரும் சீர் என்று குறித்த தாங்கள் தேமாச்சீர் என்று ஏன் குறித்திருக்கிறீர்கள்?

  • நேர் நேர் என்று இரண்டும் நேராகவே வரும் ஈரசைச்

சீர் என்பதைத் தெரிவிக்கவே, தேமாச்சீர் என்றேன்.

19. தேமா, புளிமா என்பன போல வரும் வாய்பாடுகள்

யார் அமைத்தவை?

  • யாப்பருங்கலக் காரிகை ஆசிரியராகிய அமிர்த சாகரர் அமைத்தார் என்று தோன்றுகிறது. வேறுவித வாய் பாடுகளை வேறு இலக்கண நூல் ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள்.

20. திருக்குறளில் கலித்தளை வருகிறதா?

  • வெண்பா வகை எதிலும் வெண்டளையன்றி வேறு.

எதுவும் வராது.

21. இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை இரண்டும் வெண்பாவுக்கும் கட்டளைக் கலித் துறைக்குமே உரியன. சரியா?

  • வெண்பாவில் வெண்டளையே வரும். மற்றத் தளைகள் வாரா. ஆனால் மற்றப் பாடல்களில் வெண்டளையும் வரும்.

22. வெண்பாவில் மோனை எந்தச் சீரில் அமைந்தால்

சிறப்பு? ஈற்றடியில் எந்தச் சீரில் வந்தால் அழகு?

  • எல்லா அடிகளிலும் மூன்றாம் சீரில் வந்தால் சிறப்பு.

23. ங், ட, ன, ய, ர, ல, ழ, ள, ற, ன இவைகளுக்கு

மோனை இல்லையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/230&oldid=655834" இலிருந்து மீள்விக்கப்பட்டது