பக்கம்:கவி பாடலாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கவி பாடலாம்

என்ற முதலடிக்கு முன்பு சொன்ன மாதிரி வாய்பாடு அமைத்துப் பார்த்தால்,

தான தண்ன தனதனனா

தான தான தனதனனா

என்று வரும். முதல் பாதியும் பின் பாதியும் ஒத்து இணைந்து ஒலிக்கின்றன. பாதி அடியில் முதல் இரண்டு சீர்களையும் விட மூன்றாவது சீர்சற்றே பெரியதாக இருக்கிறது. தனதன தான தான’ என்ற அரை யடியின் ஒசை வேறு; இந்த ஓசை வேறு. இந்த ஓசை வேறுபாடு எதனால் உண்டாகிறது?

சீர் என்பது இன்னதென்று இன்னும் நாம் தெரிந்து கொள்ளவில்லை. புத்தகத்தில் பிரிந்திருக்கிறதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று செளகரியத்தை உத்தேசித்து முன்பு சொன்னேன். இப்போது, நாமே சீரைப் பற்றித் தெரிந்து கொண்டு அதைப் பிரிக்கவும் தெரிந்து கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

சொல் என்பதற்கு உறுப்புக்கள் உண்டு. பல அங்கங்கள் சேர்ந்து உடம்பு அமைகிறது. அது போலவே பல எழுத்துக்கள் சேர்ந்து சொல் அமைகிறது. செய்யுளில் ஒர் அடியில் பல சீர்கள் இருக்கின்றன. சீர் என்பது அங்கம். பல சீர்களை உடைய அடி அங்கி; உடம்பு போன்றது. அப்படியே செய்யுள் என்னும் உடம்பில் அடி என்பது அங்கம். செய்யுளை நோக்க அடி என்பது அங்க மாகவும், சீரை நோக்க அது அங்கியாகவும் இருக்கிறது. பிள்ளையை நோக்க ஒருவன் தந்தையாக இருக்கிறான்; ஆனால் அவன் தந்தையை நோக்க அவன் மகனாக இருக்கிறான். அவ்வாறே அடி ஒரு முறையில் உடம்புபோல அங்கியாகவும், வேறு ஒரு முறையில் அங்கமாகவும் இருக்கிறது. அது போலவே சீருக்கும் அங்கம் உண்டு. அதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/39&oldid=655873" இலிருந்து மீள்விக்கப்பட்டது