பக்கம்:கவி பாடலாம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசையும் சீரும் 39

அசை என்று சொல்வார்கள். அசைகளின் வேறுபாட்டால் சீரும் வேறுபடும். அந்த அசைக்கு அங்கம் எழுத்து. எழுத் தால் ஆனது அசை அசையால் ஆனது சீர்; சீர்களால் ஆனது அடி எழுத்து என்பது எல்லா இலக்கணத் துக்கும் அடிப் படை யாப்பிலக்கணத்தின் சிறப்பான அடிப்படை அசை.

‘இதந்தரு மனையி னிங்கி”

என்பது அரையடி அதில் மூன்று சீர்கள் இருக்கின்றன. இதந்தரு என்பது ஒரு சீர். அதில் இரண்டு அசைகள் இருக்கின்றன. இதந்’ என்பது ஒர் அசை தரு என்பது ஒர் அசை. மனையி’ என்பது ஒரு சீர். அதில் மனை என்ற அசையும் யி என்ற அசையும் இருக்கின்றன. ‘aங்கி” என்பதிலும், ‘னங்’ என்ற அசையும் ‘கி’ என்ற அசையும் இருக்கின்றன. இந்த அசைகளுக்குப் பேர் உண்டு. இதந்தரு-மனை என்னும் மூன்றும் ஒரு வகை அசைகள்; யி-னிங்-கி என்பன ஒரு வகை. முன்னாலே உள்ள மூன்றும் நிரை அசைகள்; பின்னாலே உள்ளவை நேர் அசைகள். ‘இதற் என்பதும் நிரை என்பதும் ஒன்று போலவே ஒலிக்கின்றன. யி என்பதும், னிங் என்பதும் நேர் என்பது போல ஒலிக்கின்றன. நேரசை, நிரையசை என்ற இரண்டு அசைகளே உண்டு. யாப்பிலக்கணத்தின் அடிப்படை உறுப்பாகிய அசைகள் இரண்டே, மனிதன் இரண்டு காலால் நடப்பது போல, செய்யுட்கள் யாவுமே இந்த இரண்டு அசைகளாகிய அடிப்படை உறுப்புக்களைக் கொண்டு நடக்கின்றன.

க என்ற எழுத்தைத் தனியே பிரித்து உச்சரித்தால் அது நேர் அசையாகும்; அது தனிக் குற்றெழுத்து.

கா என்ற எழுத்தைச் சொன்னால் அதுவும் நேரசை யாகும்; அது தனி நெட்டெழுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/40&oldid=655875" இலிருந்து மீள்விக்கப்பட்டது