பக்கம்:கவி பாடலாம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கவி பாடலாம்

- கல் என்பதும் நேர் அசையே ஒரு குறிலும் அதனோடு ஒரு மெய்யெழுத்தும் சேர்ந்து வந்தாலும் அது நேர் அசை தான்.

கால் என்பது போல ஒரு நெடிலும் ஒரு மெய் யெழுத்தும் சேர்ந்து வந்தாலும் அதுவும் நேரசையே.

இவ்வாறு நேரசை நான்கு விதமாக வரும். நிரையசையும் நான்கு விதமாக வரும்.

கல: இது இரண்டு குறில்கள் சேர்ந்து வந்த நிரையசை,

கலா: இது ஒரு குறிலும் அதற்குப் பின் ஒரு நெடிலும் இணைந்து வந்த நிரையசை, -

கலம்: இது இரண்டு குறிலும் ஒரு மெய்யும் இணைந்து வந்த நிரையசை.

கலாம்: இது ஒரு குறிலும் ஒரு நெடிலும் ஒரு மெய்யும் சேர்ந்து வந்த நிரையசை.

&ay என்பதையே க என்றும் ல என்றும் பிரித்துத் தனித்தனியே நேர் அசையாகக் கொண்டால் என்ன என்ற கேள்வி பிறக்கலாம். பாட்டில் சீர் பிரிக்கும் போது க என்பது முன் சீரிலும் ல என்பது பின் சீரிலும் பிரிந்து வந்தால் தனித்தனியே நேரசைகளாகும். ஒரு சீரினிடையே சேர்ந்து வந்தால் நிரையசையே யாகும்.

“இதந்தரு மனையி னிங்கி”

என்ற அரை அடியில் இதந்தரு’ என்ற சீரில் இரண்டு அசைகள் இருக்கின்றன. இதந்-நிரை தரு-நிரை. எனவே, இந்தச் சீரை நிரைநிரை என்று சொல்லலாம். மனையி’ என்பது நிரை நேர் ஆகும்; மனை-நிரை:யி-நேர். aங்கி-நேர்நேர். யினி என்பதைச் சேர்த்துப் பார்த்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/41&oldid=655876" இலிருந்து மீள்விக்கப்பட்டது