பக்கம்:கவி பாடலாம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - கவி பாடலாம்

போன்ற வரையறை இது. “இதந்தரு மனையி னிங்கி என்ற அறு சீர் விருத்தத்தில் ஒவ்வோர் அடியிலும் மூன்று, ஆறாம் சீர்கள் தேமாவாகவே இருப்பதைக் காணலாம். அதை மாற்றினால் ஒசை வேறுபடுவதைப் பாட்டைச் சொல்லிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

- இதுவரையில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் இலக்கணத்தைப் பார்த்தோம். அதற்கு மேல் எழுசீர் முதலியன உண்டு.

ஆறுசீர் விருத்தம் அறிந்தவர் பின்னர் - அழகிய ஏழுசீர் விருத்தம்

கூறுமெம் முறையில் வருமென அறிந்து

குலவுறு மமைதியின் படியே வீறுறப் பாடி இன்புறல் கூடும்

விளம்பிய செய்யுளிங் கிதன்பால் வேறிலா திரண்டே அசையுறு சீர்கள் மேவுதல் கண்டுணர்ந் திடுக. இது எழுசீர் ஆசிரிய விருத்தம். ஐந்து சீர்களுக்கு மேல் எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடிக்குக் கழி நெடிலடி என்பது பெயர் என்று முன்பே தெரிந்து கொண் டிருக்கிறோம். ஆதலால் இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். -

இந்த விருத்தத்தில் எல்லாச் சீர்களும் ஈரசைச். சீர்களாகவே வந்திருப்பதைக் காணலாம். ஒரடியைப் பன்முறை ஓதி ஓதி ஓசையை உணர்ந்து கவி எழுத வேண்டும். பிறகு சீர் பிரித்து வாய்பாடு அமைத்துப் பார்த்தால், என்ன என்ன சீர் எந்த எந்த இடத்தில் அமைந் திருக்கிறது என்பதை உணரலாம். இந்தப் பாட்டில் மோனை ஐந்தாவது சீரில் அமைவது அழகு. முதல் நாலு சீர் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/55&oldid=655891" இலிருந்து மீள்விக்கப்பட்டது