பக்கம்:கவி பாடலாம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுசீர் விருத்தம் - 53

கருதாத சீல ராயினும்

கசியாத நேச ராயினும்

வரையாத யாவ ராயினும்

வலமாக நாக ராயர்சூழ்

திருவால வாயுள் மேவுவார்

சிவமாவ ராணை யாணையால்.”

இதுவும் அறுசீர் விருத்தம்; சந்தம் அமைந்தது. இதில்

அரையடிக்கு ஒரு காயும் ஒரு மாவும் ஒரு விளமும் வந்தன. ‘மூன்றாமடி ஆறாவது சீர் ராயர்சூழ் என்பதில் ர் என்பது ஒலி சிறக்காததனால் அதுவும் கூவிளம்போல் நின்றது. புலவர்களின் ஆற்றலுக்கு ஏற்றபடி அறுசீர் விருத்தங்கள் வெவ்வேறாக அமையும். ஆயினும் முதலிலே காட்டிய மூன்று வகைகளே பெரும்பான்மையாக நூல்களில் வருபவை.

8. எழுசீர் விருத்தம்

ஆசிரிய விருத்தங்களின் பொது இலக்கணம் எல்லா அடிகளும் அளவொத்து வருவது. அளவு என்பது சீர்களின் எண்ணிக்கை மாத்திரம் அன்று. இன்ன இன்ன சீர் இந்த இடங்களில் வர வேண்டும் என்ற வரையறை உண்டு. காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர் என்ற மூன்று சீர்களே பெரும் பாலும் ஆசிரிய விருத்தங்களில் வருகின்றன. இவை ஒரடியில் வந்தது போலவே நான்கு அடிகளிலும் வர வேண்டும். சில இடங்களில் மா, விளம், காய் என்பன போல ஈற்றசை ஒன்றியிருப்பதன்றிச் சீர் முழுவதுமே ஒரே மாதிரி வரும். தேமாச்சீர்தான் வர வேண்டும் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/54&oldid=655890" இலிருந்து மீள்விக்கப்பட்டது