பக்கம்:கவி பாடலாம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வெண்டளையும் வெண்பாவும்

is

எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி’ என்று ஒரு பாட்டு முடிகிறது. வெண்பாப் பாடுவது அரிது என்ற கருத்தை அது சொல்கிறது. ஆனால் பாடம் பண்ணுவதற்கு வெண்பா எளிதாக இருப்பது. ‘'வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை, கண் பார்க்கக் கையால் எழுதானைப்-பெண்பாவி, பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே, எற்றோமற் றெற்றோமற் றெற்று’ என்ற பாட்டில், இரண்டு முறை ஒரு வெண் பாவைச் சொன்னால் சராசரி அறிவுடையவன் ஒருவன். அதைப் பாடம் பண்ணிவிடலாம் என்ற கருத்து அமைந் திருக்கிறது.

வெண்பாவில் மிகவும் முக்கியமாக அமைய வேண்டியது வெண்டளை. மற்றப் பாடல்களை-கட்டளைக் கலித்துறையைத் தவிர-தளையைப் பற்றிக் கவலைப் படாமலே பாடலாம். தளை இலக்கணம் தெரிந்து கொள்ளா தவர்களும் வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகியவற்றை யன்றி மற்றவற்றைப் பாடிவிடலாம். ஆனால் வெண்டளை யின் இலக்கணம் தெரியாமல் வெண்பாவைப் பாடவே

(51. -

தமிழில் ஏழு தளைகள் உண்டு. வெண்பாவுக்குரிய தளையை வெண்டளை என்று சொல்வார்கள்; இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்று அது இரண்டு வகைப்படும். ஆசிரியத் தளை என்பது ஒன்று. அதுவும் நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை என்று இருவகைப்படும். கலித்தளை என்பது ஒன்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/70&oldid=655908" இலிருந்து மீள்விக்கப்பட்டது