பக்கம்:கவி பாடலாம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்டளையும் பெண்பாவும் 7

நிரை என்பது ஒன்று; விளமுன் நேர் என்பது ஒன்று;

காய்முன் நேர் என்பது ஒன்று. முன் இரண்டும் இயற்சீராகிய

ஈரசைச்சீர் முன்னாவே நிற்க, அவற்றின்பின் வரவேண்டிய சீர்களைப் பற்றிச் சொல்வது; பின்னது வெண்சீராகிய

காய்ச்சீர் நிற்க, பிறகு வருவதைப் பற்றிச் சொல்வது. நின்ற

சீர் முழுவதையும் தெரிந்து கொள்ளவேண்டும்; வரும் சீரின்

முதல் அசை இன்னதென்று தெரிந்தால் போதும்; இன்ன தளையென்று சொல்லிவிடலாம்.

(1) மாமுன் நிரை;

மாச்சீர் என்பது நேரில் முடியும் ஈரசைச் சீர், தேமா, புளிமா என்பவை (நேர்நேர், நிரைநேர்). இந்தச் சீரின் முன் நிரை வர வேண்டும். அது இயற்சீர் வெண்டளை.

“அகர முதல எழுத்தெல்லாம்.” இந்த அடியில் அகர என்பது புளிமா, அதன்முன் முத என்ற நிரை வந்தது; இது இயற்சீர் வெண்டளை. முதல என்பதும் புளிமா; இதன் முன் எழுத் என்ற நிரை வந்தது; ஆதலின் இதுவும் இயற்சீர் வெண்டளை.

(2) விளமுன் நேர்:

விளம் என்பது நிரையில் முடியும் ஈரசைச் சீர்; கூவிளம், கருவிளம் என்ற இரண்டும் விளச்சீர் என்பது நமக்குத் தெரியும். இந்த இரண்டு சீர்களுக்குப் பின் வரும் சீரின் ஆரம்பம் நேராக இருந்தால் வெண்டளை, இதுவும் இயற்சீர் வெண்டளையே. -

“மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்”

என்ற குறளின் அடியில் மலர்மிசை என்றது கருவிளம்; அதன்முன் ஏ என்ற நேர் வந்தது. ஏகினான் என்பது கூவிளம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/72&oldid=655910" இலிருந்து மீள்விக்கப்பட்டது