பக்கம்:கவி பாடலாம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. வெண்பா இறுதிச் சீர்

@@lorum. ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். நேர் என்னும் ஓர் அசையே சீராக வருவதுண்டு; அப்படியே நிரை என்பதும் வரும், நேர் என்ற அசைச் சீரின் வாய்பாடு நாள்; நிரை என்ற அசைச்சீரின் வாய்பாடு மலர்.

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்’ என்ற குறளின் ஈற்றுச்சீர் வார் என்பது; அது நேர் என்னும் ஒரசைச்சீர்; ஆகவே, இந்தக் குறள் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்தது.

‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ

னற்றா டொழாஅ ரெனின்

என்பதில் ரெனின் என்பது ஈற்றுச் சீர். இரண்டு குறிலும் ஒர் ஒற்றும் வந்த நிரையசையே சீராக நிற்கிறது; மலர் என்பது அதற்கு வாய்பாடு. ஆகவே இந்தக் குறள் மலர் என்ற வாய்பாட்டில் முடிந்திருக்கிறது.

வெண்பாவில் ஈரசைச்சீரும், மூவசைச் சீருள் காய்ச் சீரும், ஈற்றில் மட்டும் ஓரசைச்சீரும் வரும். ஈற்றில் ஈரசைச் சீரும் வரும்; மூவசைச் சீர் வராது.

ஓரசைச் சீர்களுக்கு இயல்பாக உள்ள வாய்ப்ாடுகளே நாள், மலர் என்பன. ஆனால் வெண்பாவில் ஈற்றில் வரும் ஈரசைச் சீர்களுக்கு, அவற்றின் இயல்பான வாய்பாடுகள் இருக்கவும் வேறு வாய்பாடுகளை வகுத்திருக்கிறார்கள். அதைக் கவனிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/78&oldid=655916" இலிருந்து மீள்விக்கப்பட்டது