பக்கம்:கவி பாடலாம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வெண்பா வகை

தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகை. ஆதலின் புலவர்களை நாற்கவி ராசர் என்று பாராட்டுவார்கள். நாற்கவிராச நம்பி என்ற புலவர் ஒருவர் அகப்பொருள் விளக்கம் என்ற நூலை இயற்றியிருக்கிறார். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு பாக் களிலும் முதலில் நிற்பது வெண்பா. அதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வெண்டளை.

பன்னிரண்டாவது கட்டுரையில் நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைப் பார்த்தோம். இப்போது அதன் வகைகளையும் மற்ற வெண்பாக்களையும் கவனிப்போம்.

குறள் வெண்பா

இரண்டு அடிகளை உடையதாக வருவது குறள் வெண்பா. வெண்பாக்களுக்குரிய பொது இலக்கணங் களாகிய (1) வெண்டளை அமைதல், (2) ஈற்றடி முச்சீராக இருத்தல், (3) மற்ற அடிகள் நாற்சீராய் வருதல், (4) ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றைப் பெற்று வருதல் என்பவை எல்லா வெண் பாக்களிலும் இருக்க வேண்டும். ஆகவே, குறள் வெண் பாக்களில் முதலடி நாற்சீராகவும் இரண்டாம் அடி முச்சீராகவும் வரும்.

இவ்வாறு வரும் குறட்பாக்களை எதுகையை நோக்கி இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். இரண்டு அடிகளும் ஒரெதுகையாக வரலாம்; அப்படி இல்லாமலும் வரலாம்.

க. பா.6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/82&oldid=655921" இலிருந்து மீள்விக்கப்பட்டது