பக்கம்:கவி பாடலாம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கவி பாடலாம்

இரண்டாம் அடியின் மூன்றாஞ் சீர்க்ாசு, பிறப்பு என்ற வாய்பாட்டுக்கு ஏற்றபடி வந்தால், தனிச் சொல் நிரையை முதலாக உடைய சீராகவே இருக்கும்; முன் இரண்டடிகளும் நிரையை முதலாக உடையனவாகவே இருக்கும். ஆதலால், இருகுறள் நேரிசை வெண்பாக்கள் யாவுமே நிரையை முதலாக உடைய சீரில் தொடங்க வேண்டும்.

15. இன்னிசை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும்

நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இன்னிசை வெண்பாவின் இலக்கணம் தெரிந்து கொள்வது மிக எளிது. நான்கு அடிகளை உடைய வெண்பாக்களில் நேரிசை வெண்பாக்கள் அல்லாதன இன்னிசை வெண்பாக்களாம். இன்னிசை வெண்பாக்களில் வெண்பாவுக்குரிய பொது இலக்கணம் அமைந்திருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. (1) வெண்டளையே வருதல், (2) ஈற்றடி முச்சீரால் வருதல், (3) ஈற்றுச் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்ற வாய்பாட்டில் அமைதல் என்ற மூன்று அடிப்படையான இலக்கணங்கள் இன்னிசை வெண்பாவிலும் அமைய வேண்டும். நேரிசை வெண்பாவில் இரண்டாவது அடியின் நான்காஞ் சீர் தனிச் சொல்லாக இருக்கும்; பாட்டு முழுவதும் ஒரெதுகையாக வேனும், முன் இரண்டடி ஒரெதுகை பின்னிரண்டடி மற்றோர் எதுகையாக இரண்டெதுகையாகவேனும் வரும். இந்த இலக்கணங்களில் எது வேறுபட்டாலும் அது இன்னிசை வெண்பா ஆகிவிடும். அப்படி வரும் இன்னிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/87&oldid=655926" இலிருந்து மீள்விக்கப்பட்டது