பக்கம்:கவி பாடலாம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னிசைவெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் 87

வெண்பாக்களை ஒருவாறு பின்கண்ட வண்ணம் வகுக்கலாம்:

(1) தனிச்சொல் இல்லாமல் ஒரெதுகையால் வருதல்.

விண்ணத்தைத் தேடி மலியத் தொகுத்துவைத்துக் கிண்ணத்தி லூற்றிக் கிழியெடுத்துத் துரிகையை

நண்ணவைத்துத் தீட்டும் நயமில்லா ஒவியனே

எண்ணமெங்கே வைத்தாய் இசை

இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா. இந்தப் பாடலில் இரண்டாம் அடி இறுதியில் தனிச் சொல் வந்திருந் தால் அது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும்.

(2) தனிச்சொல்லே இன்றி இரண்டு, மூன்று, நான்கு

விகற்பங்களால் வருதல்.

தெள்ளுதமிழ் நூலுள் திருவள்ளுவர்தந்த ஒள்ளியநூலாங்குறள்போல் உள்ளதுவேறுண்டோசொல் வையம் புகழ்ந்து மதிக்கும் கருத்துடைத்தால் செய்யதமிழ்ப் பாவும் சிறந்து. இது இரண்டு விகற்பத்தால் வந்தது.

அருணகிரி நாதர் அயில்வேல் முருகன் தருணஇளந்தாமரைத்தாள் சார்ந்தின்பம் பெற்றதனை வண்ணத் திருப்புகழால் வாய்மலர்ந்தார் இவ்வுலகில் பாடிமகிழ் வுற்றார் பலர். - இந்த வெண்பா முன் இரண்டடியும் ஒரெதுகையாய், பின் இரண்டடியும் தனித்தனி எதுகையாய் வந்தமையின் மூன்று விகற்பமுடைய இன்னிசை வெண்பா ஆயிற்று.

கன்னிக் குமரி கவின்சேரும் தென்னெல்லை வேங்கடமாம் குன்றம் விளங்கும் வடவெல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/88&oldid=655927" இலிருந்து மீள்விக்கப்பட்டது