பக்கம்:கவி பாடலாம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கவி பாடலாம்

வான்கரும்பே தொண்டை வளநாடு வான் கரும்பின் சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாம் கட்டியுட் டானேற்ற மாய சருக்கரை மாமணியே ஆணேற்றான் கச்சியகம்.”

இது ஏழடியினால் வந்த பஃறொடை வெண்பா.

பன்னிரண்டு அடிக்கு மேல் வருவன கலிவெண்பா. முன்பெல்லாம் கலிப்பாவின் வகையான வெண்கலிப் பாவையே கலிவெண்பா என்று சொல்லி வந்தார்கள். வெண்டளையே வந்தாலும், அதோடு கலித்தளை விரவி வந்தாலும் வெண்கலிப்பா என்னும் பெயரால் வழங்கியது. பிற்காலத்தில் பல அடிகளால் வெண்டளை பிறழாது அமைந்த பாட்டையே கலிவெண்பா என்று சொல்ல லானார்கள். கந்தர் கலிவெண்பா, திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா என்ற பிரபந்தங்கள் கலிவெண் பாவினால் அமைந்தவை. துது, உலா, மடல் என்பவையும் கலிவெண்பாக்களால் அமைந்தவையே. . 5t) t-1 G உலாக்களும் துதுகளும் தமிழில் உள்ளன.

கலிவெண்பாவில் இரண்டடிகளை ஒரு கண்ணி என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ‘மூதுலாக் கண்ணி தொறும்’ என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்க. கண்ணி களைக் கொண்டு கணக்கிடும் வழக்கமும் உண்டாயிற்று. ஏழு கண்ணி முதல் எத்தனைகண்ணிகளாலும் கலிவெண்பா வரும். கண்ணி என்ற கணக்கு வந்துவிட்டபடியால் கலி வெண்பாவின் அடிகள் இரட்டைப் படையாகவே இருக்க வேண்டிய அவசியம் உண்டாயிற்று.

சங்க காலத்து நூலாகிய கலித்தொகையில் பல கலி வெண்பாக்கள் உள்ளன. அவற்றில் ஒற்றைப்படையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/93&oldid=655933" இலிருந்து மீள்விக்கப்பட்டது