பக்கம்:கவி பாடலாம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்துறை வகை 93

அடிகளை உடைய பாடல்களும் உண்டு. திருவாசகத்தில் முதலில் உள்ள சிவபுராணம் கலிவெண்பாவால் அமைந்தது. சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய ஆதி உலா என்பது தான் இப்போது தெரியும் உலாக்களில் பழையது. அது கண்ணிகளாகப் பிரித்துக் கணக்கிடும் வகையில் அமைந்திருக்கிறது.

வெண்பாவின் பொதுவிலக்கணம் யாவும் அமைந்து அடி மிகுதி ஒன்றே தனக்குரிய வேறுபாடாகக் கொண்ட தனால் கலி வெண்பாவைக் கலிப்பா வகையில் சேர்ப்பதை விட வெண்பா வகையில் சேர்ப்பதே பொருத்தமானது; கலித்தளை விரவிவரும் வெண்கலிப்பாவைக் கலிப்பா வகையில் சேர்க்கலாம்.

17. கலித்துறை வகை

இதுவரையிலும் ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா வெண்பா ஆகியவற்றைப் பற்றிய இலக்கணங்களைத் தெரிந்து கொண்டோம். வெண்பா, ஆசிரியப்பா என்ற இரண்டு பாக்களே இலக்கியங்களில் பெரும்பாலும் வழங்குகின்றன. கலிப்பா வகையில் தரவு கொச்சகக் கலிப்பா என்பதும், அதன் இனத்தில் கலித்துறை, கலிவிருத்தம் என்பனவும் இன்றும் புலவர்களால் பாடப் பெறுகின்றன. விருத்தங்களாலான காப்பியங்களில் ஆசிரிய விருத்தங்களோடு மேலே சொன்ன மூவகைப் பாடல்களையும் காணலாம். கம்பனுடைய இராமாயணம் முழுவதும் விருத்த்ங்களாலானது என்று பொதுவாகச் சொல்வார்கள். ‘கம்பன் விருத்தக் கவித்திறமும், “விருத்த மென்னும் ஒண்பாவுக் குயர் கம்பன்’ என்று அந்த விருத்தத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/94&oldid=655934" இலிருந்து மீள்விக்கப்பட்டது