பக்கம்:கவி பாடலாம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 கவி பாடலாம்

திறத்தைப் பாராட்டிப் பழம் புலவர்கள் பாடியிருக் கிறார்கள். அதில் தரவு கொச்சகக் கலிப்பாவும் கலித் துறையும் இருக்கின்றன. .

பாக்கள் நான்கு; பாவினங்கள் மூன்று. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை நான்கு பாக்கள். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்று மும்மூன்று இனங்கள் உண்டு. ஆசிரியப்பா வின் இனங்களில் ஒன்றாகிய ஆசிரிய விருத்தத்தின் இலக்கணத்தை விரிவாகப் பார்த்தோம். வெண்பாவின் இனமான விருத்தத்துக்கு வெளிவிருத்தம் என்று பெயர். கலியினங்களில் ஒன்று கலிவிருத்தம். அப்படியே வஞ்சியினங்களில் ஒன்று வஞ்சி விருத்தம். இந்த விருத்தங்கள் யாவுமே அளவொத்த நான்கு அடிகளை உடையன. கலித்துறையென்பது அடிக்கு ஐந்து சீர்களாய் நான்கு அடியும் அளவொத்து வருவது.

வேதம் யாவையும் அறிந்துயர் வித்தகன் விமல போதம் மேவிய புங்கவன் எங்கணும் புகழ்கொள் நாதன் நான்முக னும்பொரு வில்லனாம் நம்பன் கோத மில்லவன் திருவடி பணிந்துகை குவிப்பாம்.

இது கலித்துறை. இதைக் கலிநிலைத்துறை என்றும் சொல்வதுண்டு. இந்தச் செய்யுளில் ஒரடிக்கு ஐந்து சீர்கள் வந்துள்ளன. முதற் சீரும் ஐந்தாம் சீரும் மாச்சீராகவும் மற்ற மூன்று சீர்களும் விளச்சீர்களாகவும் வந்திருக்கின்றன.

வேதம்- யாவையும் அறிந்துயர் - வித்தகன் - விமல தேமா - கூவிளம் - கருவிளம் - கூவிளம் - புளிமா, முதற்சீரும் ஐந்தாம் சீரும் புளிமாவாகவும் வரலாம்; தேமாவாகவும் வரலாம். முதற்சீர் ஒரடியில் தேமாவாக வந்தால் நான்கடிகளிலும் தேமாவாகவே வர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/95&oldid=655935" இலிருந்து மீள்விக்கப்பட்டது