உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ச.பரிமளா தலைவர் தொல்லறிவியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் &

கா.சத்தியபாமா

விரிவுரையாளர் தமிழ்த்துறை

குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

தஞ்சாவூர்

மெக்கன்சி சுவடிய

யில்

மீனியல் செய்திகள்

முன்னுரை

தமிழகத்தில் வாழ்ந்த மிகப் பழைய குடியினர் வில்லவர். மீனவர் என்பவர்களே... இவ்விரு கிளையினத்தவர்களும் இந்தியா முழுவதும் பரவியிருந்த தொல்குடியினர் என்பதும் (கா. அப்பாத்துரை, 1962), வலைவீசி மீன் பிடிக்கும் மீனவமக்கள் பாண்டிய மக்களோடு தொடர்புபடுத்தப்பட்டிருப்பதும், துஷ்யந்தனின் மகனான பரதனின் வம்சத்தவர்களே இவர்கள் என்பதும். . கௌரவர், பாண்டவர் தோன்றிய குடியிலே தோன்றியவர் என்பதும், மதுரைப் பாண்டியனின் வழித் தோன்றல்கள் என்பதும் (ச. முருகானந்தம், 1990) இவர்களை அரச வம்சத்தினராகக் காட்டுகின்றன. ஆனால், கால்டுவெல், நீலகண்டசாஸ்திரிகள் போன்ற வரலாற்று ஆசிரியர்களும், சீனப்பயணி பாஹியானும். ஜேம்ஸ் ஆர்னெல் போன்ற ஆங்கில அதிகாரிகளும் பரதவரை மிகத் தாழ்ந்த சாதியினராகக் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்று ஆய்வுக்குரிய இப்பரதவர்கள் மிகப் பழங்குடியினரான நாகர் இனத்தைச் சார்ந்த மீனவர்களான 'பரதர்', 'பரவர்', 'பரவா’, 'பரதவர்', 'வலையர்' என்பாரைக் குறிக்கும் என்பதும் ஜேம்ஸ் ஆர்னலின் (1920) கூற்றாகும்.

இப்பரதவப் பெருங்குடி மக்களைக் குறித்த பழம்பெரும் செய்திகளைத் தொல்காப்பியமும். சங்க இலக்கியங்களும், பிற்கால இலக்கியங்களும் எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், அவை அம்மக்களது அக்காலச் சமூகநிலை. அவர்களது தொழில்துறை, பயன்படுத்திய மீன்பிடிப்புக் கருவிகள். வலையில் கிடைத்த மீன்களின் வகைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்குரிய அனைத்துச்

96

காகிதச்சுவடி ஆய்வுகள்