உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சான்றுகளையும் விரிவாகத் தருகின்றன என்று கூறுதற்கியலாது. வேறு நூல்களிலும் மீனவர்களைக் குறித்த செய்திகள் அதிகமில்லை எனலாம்.

அவ்வகையில். மெக்கன்சியின் காகிதச் சுவடியில் குறிப்பாக. பழவேற்காடு வரலாற்றைக் கூறும் சுவடியில் (சுவடி எண். 3082) 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் 15 - 16ஆம் நூற்றாண்டுகளிலும் அங்கு வாழ்ந்திருந்த மீனவர்களது சமூகநிலைப்பற்றியும் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.

இக்கால மீனவர்களது வாழ்வுமுறை. மீன்பிடிப்புக் கருவிகள் இப்போது கிடைக்கின்ற மீனினங்கள் இவற்றுடன் அக்கால மீனவர்களது வாழ்வு முறை மீன்பிடிக் கலங்கள் மற்றும் கருவிகள். மீன் இனங்கள் இவற்றை ஒப்பிட்டு அறிவதற்கும் மீனியல் தொடர்பான வேறு பல செய்திகளை அறிந்து கொள்வதற்கும் இச்சுவடி துணை செய்கின்றது எனில் அது மிகையன்று.

பொதுவாக, காகிதச் சுவடிகளில் அறிவியல் தொடர்பான செய்திகள் மிக அதிகமில்லை என்னுங்காரணத்தால் இச்சுவடியில் காணப்பெறும் செய்திகள் அனைத்தும் வரிக்கு வரி மாற்றங்கள் ஏதும் செய்யப்பெறாமல் இங்கு தரப்பட்டுள்ளன. அவ்வகையில் பரதவ சமூகத்தின் சாதிப் பிரிவுகளும் தொழிலும், மீன் பிடிப்புக் கருவிகளும், கடலிலும் ஆறுகளிலும் கிடைக்கின்ற வெவ்வேறு வகையான மீன்களின் பெயர்களும், அவற்றின் வடிவங்களும், அளவுகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையின் முடிவில் இன்றைய மீனியல் செய்திகளுடன் இப்பதிவுகள் ஒப்பு நோக்கப்பட்டுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மீனியல் தொடர்பாக ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்களுக்கு இச்செய்திகள் பெரும் பயனளிப்பவையாக உள்ளன தொழில்

கடலில். பட்டணவரும் கரையாரும் மட்டுமே மீன் பிடிப்பர். ஆற்றுச் கழியிலே பட்டணவரம் கரையாரும் மீன் பிடிப்பதுமல்லாமல் செம்படவரும் மீன் பிடிப்பர். பட்டணவரும் கரையாரும் சமுத்திரக்கரையோரத்திலாவது ஆற்றுக் கழியோரத்திலாவது குடியிருப்பதேயல்லாமல் கரையோரம் அல்லாத ஊர்களில் குடியிருப்பது இல்லை. இந்தப் பட்டணவரும் கரையாரும் வலை முடைதல். மீன் பிடித்தல். படகு விடுதல் முதலான தொழில்களைச் செய்வர். இவர்களில் பெண்கள் சில சமயங்களில் ஆண்களோடு வலை இழுப்பதோடு அல்லாமல் பச்சை மீன்களையும் கருவாடுகளையும் விற்பர். பட்டணவரும் கரையாரும் பேசுகின்ற தமிழ் மிகவும் கொச்சையாக இருக்கும்.

செம்படவர்கள் கரையோரங்களில் குடியிருப்பதைத் தவிர ஆற்றோரங்களிலும் குடியிருப்பர். இந்தச் சாதி ஆண்கள் வலைமுடைவர். மீன் பிடிப்பர். பெண்கள் மீன். கருவாடு முதலானவற்றை விற்பதோடு சிலர் துணி நெய்வர்.

கடலில் ஆமை கிடைக்கும். இது நான்கு ஆள் சுமை. 5 ஆள் சுமையாக இருக்கும். அந்தக் கரையில் நண்டுகள் அகப்படும். அவை சிறியவையாக இருக்கும். ஆற்றுக்கழியில் நண்டுகள் அகப்படும். அது குத்துக்குத்துப் பெரிதாய்ப் பெரிதாகவும் இருக்கும். இவற்றைத் தவிரத் தூண்டில் கொண்டு கடலில். ஆற்றங்கழியில் மீன் பிடிப்பதும் உண்டு.

காகிதச்சுவடி ஆய்வுகள்

97