உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கடல் மீன்களில் திமி என்பதும் திமிங்கிலம் என்பதும் யானையை விழுங்கும் மீன். மனிதரை விழுங்கும் பேய்ச்சுறா மற்றும் பல மீன்கள் வலைகளில் அகப்படாது.

கடலிலே மீன் பிடிக்கின்ற வலைகளின் பெயர்களும் மீன் பிடிக்கின்ற விதமும் காலமும்

காவ செட்டி, தான முதலி சொன்ன கைபீது

பெருவலை

இதன் முனையில் பை இருக்கும். பத்து ஆள். பன்னிரெண்டு ஆள் சுமை இருக்கும். அதைச் சமுத்திரத்தில் அரை நாழிகை வழி மட்டுக்கும் போட்டு இரு பக்கத்திலேயும் இருக்கிறது. போகின்றபோது ஒரு படகிலே வலையைப் போட்டுக் கொண்டு,மூன்று ஆள் அல்லது நான்கு ஆள் ஏறிக்கொண்டு அந்த வலை ஒரு குனைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு. ஒருவன் கரையிலே நிற்பான். மற்ற வலையெல்லாம் சமுத்திரத்திலே அரைநாழி வழி தூரம் போய் அங்கே இருந்து 500 மார் நீளம் இருக்கும் அதுக்குள்ளே பை 10 அல்லது 12 மார் நீளம் இருக்கும். தேங்காய் நார் கயிற்றால் பின்னுவது. மேல் வலை உள் வலையைச் சணல் பிரியாலே பின்னுவது. அகலம் 2 மார் நீளம் அளவிலே விட்டுக் கொண்டு 6 மடங்காகத் திரும்பி அளவிலே விட்டு மற்றொரு குனைக் கயிற்றைக் கரையிலே கொண்டு வந்து கடலில் நிறுத்திப் போட்டு 30 பேர் 35 பேர் ஆண்களும் பெண்களும் இரண்டு பக்கங்களிலும் இழுப்பார்கள்.

மப்பும் மாரியும் (மழையும்) பனியுமாக இருந்து காற்று அதிகமில்லாமல் ஒடுக்கமாக இருந்தால், வெள்ளாரா. சுறா. திருக்கை முதலாகிய மீன்கள் அதிகமாய் அகப்படும். காற்று அதிகமானால் மீன் அதிகம் அகப்படாது.

பெருவலையில் மீன் அதிகமாக அகப்பட்டால் 10 வராகன் 12 வராகன் மீன் அகப்படும். குறைந்தது 6 வராகன், 4 வராகன், 2 வராகன். 1 வராகன் இப்படி இருந்தாலும் இருக்கும். இந்தப் பெருவலையைச் சமுத்திரத்திலே போட்டுப் பகலிலே மீன் பிடிப்பது மட்டும் அல்லாமல் சில வேளைகளில் இரவிலே பிடிப்பார்கள். இந்தப் பெருவலையில் மழைக் காலம் பனிக் காலம் ஆகிய காலங்களில் மட்டும் மீன் பிடிப்பார்கள். கோடை காலத்தில் பிடிப்பது இல்லை. பிடித்தால் மீன் கிடைப்பது இல்லை. கோடை காலத்தில் பெரு வலையைக் கரையிலே கட்டி வைப்பார்கள். மிகுதியாக மீன் அகப்பட்டால். அப்பொழுதே லாபக்காரருக்கு ஒரு வராகன் மீன் !4 வராகனாகக் கொடுத்து விடுவார்கள்.

அவர்கள் கொண்டு போய் சென்னைப் பட்டினம் முதலான இடங்களில்

விற்றுக் கொள்வார்கள். மீதமாய்க் கொஞ்சம் இருந்தால் பெண்கள் எடுத்துக் கொண்டுபோய் அருகாமையில் இருக்கிற தெருக்களில் விற்றுக் கொள்வதும் உண்டு. இது தவிரப் படகில், கட்டு மரத்தில் மீன் பிடிப்பதற்குப் பெண்கள் செல்வது இல்லை.

98

காகிதச்சுவடி ஆய்வுகள்