உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தூரிவலை

இவ்வலைக்குள் பை இருக்கும். இது இரண்டாள் சுமை கொண்டது. 20 மார் நீளம் ஒரு மார் அகலம் இருக்கும். இதை ஒரு கட்டுமரத்திலே ஏற்றிக் கொண்டு ஒரு பெரிய பறியும் வைத்துக் கொண்டு, அதிலே இரண்டு ஆள் ஏறிக் கொண்டு 2 பக்கத்திலேயும் இரண்டு கட்டு மரங்களில் நான்கு நான்கு பேர் ஏறிக் கொண்டு ஆக 10 பேர் சமுத்திரத்தில் ஒரு நாழி வழி தூரம் 11/2 நாழி வழி தூரம் போய் மீன் கூட்டங்களைக் கண்ட இடத்தில் இரண்டு பக்கத்திலேயும் இருக்கிற இரண்டு கட்டு மரக்காரரும் அந்த வலை 2 குனைக் கயிற்றையும் பிடித்துக் கொண்டு 2 பக்கத்திலேயும் இழுத்துக் கொண்டும் நெருங்கிவந்த பிற்பாடு நடுவே இருக்கிற கட்டுமரக்காரன் 2 பேரும் வலையைப் பிடித்து மீனைத் தூக்கிப் பறியிலே போட்டுக் கொள்வார்கள்.

இப்படி 10 முறை 8 முறை பிடித்துப் பறி நிரம்பினால் பின்னர்க் கரைக்கு வருவார்கள். இதில் கானாங்கழுத்தன். சுதும்பு, முள்ளுவாளை, ஓலைவாளை முதலாகிய மீன்கள் கிடைக்கும். மீன்கள் அதிகமாய்க் கிடைத்தால் இரண்டு வராகன் மீன் இருக்கும் குறைவாக இருந்தால் 1 வராகன் கிடைக்கும்.

மாவலை

இது ஐந்து அல்லது 6 மார் நீளத்தில் இருக்கும். ஒரு பை இருக்கும். அகலம் 5 அல்லது 6 மார். நான்கு கட்டு மரத்தில் 6 பேர் ஏறிக் கொண்டு, வலையும் பறியும் வைத்துக் கொண்டு போய் மூன்று அல்லது நான்கு ஆள் புருஷத்திலே வலையைக் கீழே விட்டு புருஷம் 1 ஆள் தன் இரு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்திச் சேர்த்துப் பிடித்த நிலையில் எவ்வளவு உயரம் இருப்பாரோ அந்த நீள அளவு நான்கு பக்கத்திலேயும் வலையைப் பிடித்துத் தூக்கினால் காசாம் பொடி முதலான மீன்களும் அகப்படும் இதில் 1/2 வராகன், 1/4 வராகன் பணம் மட்டுமே கிடைக்கும். அதிகம் கிடைப்பது இல்லை.

கண்ணிவலை

இரண்டு ஆள் சுமை, ஒரு மார் அகலம் 50 அல்லது 60 மார் நீளம். இதை ஒரு கட்டுமரத்திலே ஏற்றிக் கொண்டு ஒரு பறியும் வைத்துக் கொண்டு இரண்டு ஆட்களும் ஏறிக் கொண்டு சமுத்திரத்திலே போய் அரை நாழி வழி தூரம் நீளம் அலையவிட்டால் சுறா மீன், உல்ல மீன் முதலாகியது அகப்படும். இப்படி 8 அல்லது 10 முறைவிட்டுப் பறி நிரம்பினால் கரையேறுகிறது.

சிறுவலை

இது ஓராள் சுமை இருக்கும். ஒரு பை போல் இருக்கும். 10 மார் நீளம். 4 மார் அகலம். அதுவும் பறியும் படகிலே ஏற்றிக் கொண்டு 10 ஆட்கள் ஏறிக் கொண்டு சமுத்திரத்திலே 4 அல்லது 5 ஆள் புருஷத்திலே அரை நாழி வழி தூரம் போட்டு ஏழு அல்லது 8 பேர் நீச்சாகக் கீழே இறங்கி, வலையை விட்டு நுணலை மீன் முதலாகிய மீனை எழுப்பி வலையிலே வந்த பிற்பாடு படகிலே போட்டுக் கொள்வார்கள். இப்படி 10 விசை 8 விசை பிடித்துக் கொண்டு கரை ஏறுவது.

இந்த வலையை ஆற்றிலே போட்டு 2 ஆட்கள் இரண்டு பக்கங்களிலேயும் காகிதச்சுவடி ஆய்வுகள்

99