உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இழுத்து 2 பக்கங்களில் இரண்டு ஆட்கள் மீனை ஒட்டினால் மடலை மீன் முதலானவைகளும் அகப்படும்.

ஆற்றுக் கழியில் ஆழமாய் இருக்கின்ற இடத்தில் படகில் கட்டு மரத்தில் ஏறிக் கொண்டு போய் மீன் பிடிப்பார்கள். ஆழமில்லாத இடத்தில் ஆற்றில் இறங்கி வலை போட்டுப் பிடிப்பார்கள். ஆற்றிலே பெருவலையும் போட்டு, சில சமயங்களில் கொடுவா மீன், சுறா மீன் முதலானவற்றையும் பிடிப்பதும் உண்டு.

கொண்டைவலை

இது 200 மார் நீளம் இருக்கும். 2 மார் அகலம் இருக்கும். கொம்பு கட்டியிருக்கும். உள்ளே பை இருக்கும்.

சிறுவலை

10 மார் நீளம் 2 மார் அகலம் கொண்டது ஆற்றிலே போட்டு இரண்டு பேர் இழுத்தால் தளரிப்பொடி போன்றவை கிடைக்கும்.

கல் வலை

6 மார் நீளம் 4 மார் அகலம் உள்ளது. ஆற்றங்கழியில் மீன் பிடிக்கப் பயன்படும்.

பறடி வலை, சிறு வலை, ஓலை வலை போன்ற வலைகளும் போட்டு ஆற்றங்கழியில் மீன்பிடிப்பார்கள்.

வலையிலே அகப்படுகின்ற மீன்களின் பெயர்களும் அவற்றின் அளவுகளும்

கடல் மீன்கள்

1. வெள்ளறா மீன்

2. சுறா மீன்

ஓராள் பருமன், இரண்டு முழ நீளம். இது முழு வளர்ச்சி பெற்றது.

அடித்தொடைப் பருமன், ஒன்றரை முழ நீளம்

கீழ்க்கால் பருமன், ஒரு முழ நீளம்.

3. பால் சுறா

4. புகைச் சுறா

5.வஞ்சிரம்

6. முள வாளை

7. எருமை நாக்கு

100

கீழ்க்கால் பருமன். ஒரு முழ நீளம்.

கீழ்க்கால் பருமன், ஒரு முழ நீளம்.

.

கை பருமன் ஒன்றரை கை அகலம் ஒரு முழ நீளம்.

இரண்டு கை அகலம் ஒன்றரை சாண் நீளம்.

காகிதச்சுவடி ஆய்வுகள்