உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மரு. சே. பிரேமா பேராசிரியர் மற்றும் தலைவர் சித்தமருத்துவத் துறை தமிழ்ப் பல்லைக்கழகம் தஞ்சாவூர் &

மரு. ச. ரங்கராசன் சித்த மருத்துவ அலுவலர் அரசு மருத்துவமனை கந்தர்வ கோட்டை

காகித மருத்துவச் சுவடிகள்

ஒரு பார்வை

முன்னுரை

தமிழகத்தில் ஏறத்தாழ 25.000 மருத்துவச் சுவடிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதில் காகிதத்தில் எழுதிய மருத்துவச் சுவடிகளும் அடங்கும். அழிந்து விடாமல் காப்பதற்காக, மூல ஒலைச் சுவடியிலிருந்து நகல் படியாகக் காகிதத்தில் எடுக்கப்பட்டவை காகிதச் சுவடிகளாகும். ஓலைச் சுவடிகளில் எழுதுவது கடினமாக இருந்தமையால், மாற்றாக அறிவியல் முன்னேற்றம் காரணமாக எகிப்தில் பாபிரஸ் என்ற புல்லானது காகிதம் செய்யப் பயன்பட்டு. நூல்கள் எழுதப்பட்டன கண்டறியப்பட்டது. சீனாவில்தான் காகிதம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டு, மையால் எழுதுகோல் மூலம் எழுதப்பட்டது. இந்தியாவிலும் ஓலைச் சுவடிகளுக்கு மாற்றாகக் காகிதத்தில் நூல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டன. கடுக்காய் போன்றவற்றை அரைத்து மை தயாரிக்கப்பட்டது. இந்த வகை மையினால் காகிதத்தில் தூரிகை போன்ற பொருட்களால் எழுதப்பட்டது.

காகிதம் வைக்கோல்புரி, கரும்புச்சக்கை போன்றவற்றை மென் பொருளாக்கிச் சூரிய ஒளியில் காய வைத்து எடுக்கப்பட்டது. உலர்ந்த தகடு போன்ற இப்பொருளை ஓலைச் சுவடிக்கு மாற்றாகப் பயன்படுத்தி வந்தார்கள். இத்தகைய காகிதங்கள் யாவும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. அச்சு இயந்திரம் 18ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வரும் வரை, இந்நிலையே நீடித்தது. பின்னர் இயந்திரங்கள் மூலம் பல்வேறு வகையான காகிதங்கள் தயாரிக்கப்பட்டன. சித்த மருத்துவ நூல்கள் யாவும் பிற்காலத்தில் சுவடிகளிலிருந்து காகிதத்தில் படி எடுக்கப்பட்டன. மூலச் சுவடி ஓலையிலும், நகல்படி காகிதத்திலுமாகப் பல சித்த மருத்துவச் சுவடிகள் உள்ளன. தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பல காகித காகிதச்சுவடி ஆய்வுகள்

105