உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மூட்டைகளில் மருத்துவச் சுவடிகள் உள்ளன

நாட்குறிப்புகளும் கடிதங்களும்

ஆவணக் காப்பகத்திலுள்ள கடிதங்களும் சிறந்த காகிதச் சுவடிகளாகக் கருத இயலும். சான்றாக ஆண்டிறிக் அடிகளாரின்' 60 கடிதங்களைக் கூறலாம். 'டாக்குமெண்டிப் இண்டிகா' என இவை போற்றப் படுகின்றன. இவ்வடிகளார் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரின் கடிதங்களால் அக்காலச் சமுதாய, நாகரிகப் பழக்க வழக்கங்களையும் குறிப்பாகப் பரதவரின் சமுதாயம் பற்றியும். கிறிஸ்தவ மக்களின் நிலை பற்றியும் அறிய முடியும். "சிறு பூசல்களுக்கும். நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொள்ளும் நிலை, பரதவப் பெண்களிடையே பெருமளவு இருந்தது எனவே இக்கடிதங்களைக் காகித சுவடிகளாகவும் எடுத்துக் கொள்ளலாம். கடிதக் குறிப்பில் மருத்துவச் செய்திகள்

2

பாண்டிச்சேரியின் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் மிகவும் புகழுடையவை. இந்த நாட்குறிப்புகள் மூலம் மருத்துவம் தொடர்புடைய பல செய்திகளை அறிய முடிகிறது. ஆண்டிறிக் அடிகளாரின் கடிதங்களிலும் மருத்துவம் பற்றிய பல்வேறு செய்திகள் கூறப்படுகின்றன. போர்ச்சுகீசியர்கள் புன்னக்காயலில் மருத்துவமனையும் கல்விக் கூடமும் நிறுவினர். இதுபோன்ற மருத்துவச் சாலைகளை நடத்துவதான பொறுப்பை. போர்த்துகீசியத் துறவிகள் ஏற்றனர். இவை எளிய மக்களுக்கும். காயமுற்ற போர் வீரர்களுக்கும் பயன்பட்டன. இம்மருத்துவ மனைகள் தக்க பொருளுதவி இன்றிச் சீர்கேடுற்றன. போர்க்காலங்களில் இம்மருத்துவ மனைகளுக்குத் தீயிடப்பட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பொருளுதவியைப் பிற்காலத்தில் 'கொம்பேரி சபையானது ஏற்றது. ஞாயிறன்று காணிக்கைகளை ஏற்றல் மூலமாகவும். செல்வர்களை அணுகி அவர்களின் உதவியைப் பெற்றும் திருச்சபைகளின் மருத்துவமனைகள் இயங்கின புன்னக்காயல் மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டதால். புறச் சமயத்தவர்களும் இம்மருத்துவமனையை அணுகினார்கள். எனவே புதிய மருத்துவ மனைகள் நிறுவப்பட்டன. பணியாளர்களுக்கு உணவு, உடைகள் வாங்கப் புதிய திட்டங்கள் தோன்றின.

ஆனந்தரங்கர் நாட்குறிப்பு

ஒரு

ஒரு

இவருடைய நாட்குறிப்புகளைப் பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அண்மைக் காலத்தில் இவரது பெயரிலமைந்த 'ஆய்வு மையம் +3 நூலைப்பதிப்பித்துள்ளது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளில் ஏற்றுமதி. இறக்குமதிப் பொருட்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் ஏற்றுமதி செய்யப்பட்ட ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. இவை ஆனந்தரங்கர் அறியாமலே கப்பல்களில் ஏற்றப்பட்டிருத்தல் கூடும். இவரது

2.

புவனேசுவரி. முதல் ஐரோப்பியத் தமிழறிஞர் அண்டறிக்கி அடிகளார். சென்னை. 1996.

ப. 44.

மேலது, ப. 48.

ஆ. செபத்தியான். 18ஆம் நூற்றாண்டில் புதுவையின் வாழ்க்கை நிலை. ஆனந்தரங்கம் பிள்ளை ஆய்வு மையம். சபாநாயகம பிரிண்டர்ஸ். சிதம்பரம், 1991.

106

காகிதச்சுவடி ஆய்வுகள்