உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நாட்குறிப்புகள் வழியாக 16-ஆம் நூற்றாண்டில் 'பிரான்சுலா பெர்னியோ" என்ற ஐரோப்பியப் பயணி முகலாய மன்னரின் மருத்துவராகப் பணியாற்றினார் எனத் தெரிய முடிகிறது. மருத்துவப் பொருள்களான ஆலத்திக் கற்பூரம் நாகம், பாதரசம், பரங்கிச்சக்கை, படிக்காரம் என்னும் சீனாக்காரம் என்பன சீனத்திலிருந்து கற்பூரக்கட்டி, சாம்பிராணி. குந்திரிகம், கந்தகம், குங்கிலியம் என்பன சுமத்திராவிலிருந்தும் இறக்குமதியாகின. புதுவை மாநில முகறையில் 1742இல் புதிய (ஆங்கில) மருத்துவமனை நிறுவப்பட்டது. மேலும் இவரது நாட்குறிப்பில் பலவிதமான நோய்கள் பற்றியும் அதற்கு மருத்துவம் செய்த மருத்துவர்கள் பற்றியும் செய்திகள் உள்ளன. 'இமாம் சாகிப்' என்பவரின் மனைவி ஆலம்புரவி. இவர்களது வீடு, சுங்குவார் கிடங்கில் உள்ளது. இவ்வீடானது 'ஊக்கா'வால் தீப்பிடித்தது. இதில் 'ஆலம்புரவி'யின் உடல் வெந்து. மரணமடைந்தான். இவளுக்குப் பெண் மருத்துவரான 'மங்களம்' என்பவர் பரிகாரம் செய்தாள். இதிலிருந்து பெண்களுக்குத் தனியாகப் பெண் மருத்துவரே மருத்துவம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. காசா வெட்டி என்பவர் சிற்றரசர். இவருக்கு உடல் நலம் குன்றியதால் இவருக்கு மருத்துவம் செய்யப் புதுச்சேரிப் பட்டணத்து வைத்தியர். ஆறுமுகப் பண்டித பண்டாரம் என்பவரை ஆனந்தரங்கர் அனுப்புகின்றார். வைத்தியர் 3 மாத காலம் மருத்துவம் செய்து சிறிது நோய் தீர்ந்தவுடன் திருப்பதி. கானாத்திரி செல்லுகின்றார். ஊரிலிருக்கும் போது சோபை என்ற வீக்க நோய் கண்டது என்ற செய்தி வருகின்றது. ஆனந்தரங்கரிடம், சிற்றரசர் 1 மாதம் உயிருடன் இருந்தால் அதிகம் என்ற விவரத்தைக் கூறி, மருத்துவம் செய்யச் செல்ல மறுக்கின்றார்.

கிறித்துவ மடாலயம் - காகிதச் சுவடிகள்

செண்பகனூர் கிறித்துவத் திருச்சபை நூலகத்தில் பல்வகையான ஆவணங்கள் உள்ளன. அவற்றுள் 'மருத்துவம்பற்றிய சுவடி' என்ற தலைப்பில் உள்ளதும் அடங்கும். இது 1886இல் மலையடிப்பட்டி சவரி முத்துப்பிள்ளை அவர்களால் பஞ்சம் பட்டியிலுள்ள சின்னப்பனுக்குக் கொடுக்கப்பட்டது. இம்மருந்துகள் யாவும் பாளையங்கோட்டை உரோமம் கத்தோலிக்க உபதேசிமார் பள்ளிக்கூடத்தில் செய்யப்பட்டு. பிணியாளர்களுக்குத் தரப்பட்டன. மேலும் இவ்வாவணக் காப்பகத்தில் வ. எண். 10. அகத்தியர் ஞானம் 31 ஞானசஞ்சீவி ( ) (எண். 346 பெவுச் அட்டவணை) எண். 344 'வைத்திய முறைகள்' உள்ளன.

கட்டுரையாசிரியரும் காகிதச் சுவடிகளும்

) 132

141

இக்கட்டுரையாளருக்குக் காகிதப்படி தொடர்பான பட்டறிவு. 1983ஆம் ஆண்டு ஏற்பட்டது. 1983இல் 'போகர் 700' என்ற றூலைத் திறனாய்வு முறையில் பல்கலைக்கழகத்திற்காகப் பதிப்பிக்கும் போது ஏற்பட்டது. 'போகர் 700' என்ற சுவடி தேவைப்பட்டது. நூலைப் பதிப்பிக்க ஏனைய சுவடி நூலகங்களில் இச்சுவடி இல்லை. கீழ்த்திசை ஓலைச் சுவடி நூலகத்தில் ஒரு சுவடி இருப்பதாக அறிந்து நகல்படி பெறச் செல்ல நேரிட்டது. சுவடிக்குப் பதிலாக 'போகர் 700' என்ற காகித நகல்படி இருந்தது.

4. ஆ. செபத்தியான். மு. கா. நூல். ப. 68.

காகிதச்சுவடி ஆய்வுகள்

107