உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதுரைத் தமிழ்ச் சங்கச் சுவடியைப் பார்த்துப் படி எடுக்கப்பட்டதாக. காகிதப் படியில் குறிப்பு இருந்தது. அதையே அடிப்படையாக வைத்து, ஏனைய ஏழு அச்சு நூல்களை ஒப்பிட்டு. மூலமும், உரையுமாக 'போகர் 700' வெளி வந்தது. இந்நூல் அனைவரின் வரவேற்பைப் பெற்றதால் இரண்டாம் பதிப்பைக் கண்டது. தஞ்சை சரசுவதி மகால் 'அகத்தியர் நூறு' என்ற தலைப்பில் சித்த மருத்துவ நூலை 1988இல் வெளியிட்டது. இரசவாதம் பற்றிக் கூறும் இந்நூலில் முழுமையற்று 85 பாடல்களே உள்ளன. திருச்சியில் உள்ள ஒரு பழைய நூல்கள் விற்கும் கடையிலிருந்து, சில கையேட்டுப் படிகளடங்கிய கட்டை 04. 11. 87இல் வாங்கினேன். அதில் 'அகத்தியர் இரசவாதம்' என்ற தலைப்பில், சரசுவதி மகால் நூலகம் பதிப்பித்த நூலின் பாடல்கள் இடம் பெற்றிருந்தன. வேறு வேறு தலைப்புகளிருந்தாலும், இரண்டும் ஒரே பாடல்களைக் கொண்டது என்று ஆய்வில் தெரிந்தது. திருச்சி சுவடியில் 'திருத்துவேன் அறியாத செய்தியெல்லாம். செப்பினேன் இரு நூறு பாடற்குள்ளே' என்ற வருவதால், இந்நூல் முற்றுப் பெற்றதாகத் தோன்றும். ஆயின், பாடல்கள் 201, 202ஐ நோக்க முற்றும் பெறாதது போல் உள்ளது. ஏடுகள் மாறியதால் ஏற்பட்டதா? அல்லது ஏடு எழுதியோரின் பிழையால் ஏற்பட்டதா? அல்லது நூலின் பாடல்கள் தொடர்பின்றிப் புகுந்துள்ளனவா? இதற்கான ஆய்வை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இது போன்றே காகிதச் சுவடிகளிலுள்ள சித்த மருத்துவ நூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டியது ஆய்வாளர்களின் கடமையாகும். காகிதச் சுவடிகள் யாவும் சுவடிகளின்வழிப் படி எடுக்கப்பட்டனவா? காகிதத்திலேயே மூலப்படியாக எழுதப்பட்டனவா? என்பதையும் ஆய்வின் கருவாகக் கொள்ள வேண்டும். முடிவுரை

ஓலைச் சுவடிகளைப் போலவே கையெழுத்துச் சுவடிகளும் அரியவை எனக் கொண்டு ஒலைச் சுவடிகளுக்குண்டான மதிப்பை அவற்றுக்கும் வழங்குதல் வேண்டும். காகிதச் சுவடிகளை, ஒலைச் சுவடிகளுடன் ஒப்பிடுதல் வேண்டும். கிறித்தவ மடங்களில் உள்ள கிறித்துவ - மேனாடுகளின் தொடர்புபற்றிய கடிதங்கள் யாவும் ஆய்வு செய்யப்படுதல் வேண்டும். ஆனந்தரங்கர் நாட்குறிப்பு, ஆண்டறிக் அடிகளார் கடிதங்கள் ஆகியவற்றையும் அரிய கையெழுத்துச் சுவடிகளாகவே கருதி அவற்றை ஆய்வு செய்தல் வேண்டும்.

இவையெல்லாம் மருத்துவத் துறைக்கும் பெரும் பயன் தரும் என்பது எனது

கருத்தாகும்.

1

108

காகிதச்சுவடி ஆய்வுகள்