உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ப.புஸ்பரட்ணம்

ஆய்வாளர் தொல்லியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் சங்ககால வேள்

இலங்கையின் பண்பாட்டு வரலாற்றைத் தென்னிந்தியாவின் தென் பகுதியுடன் குறிப்பாகத் தமிழகத்துடன் தொடர்புபடத்தி ஆராயும் போக்கு அண்மைக் காலங்களில் வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதற்குத் தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பண்பாட்டலைகள் சமகாலத்தில் இலங்கையிலும் செல்வாக்கு செலுத்தியதே காரணமாகும். இதை இலங்கையின் தொடக்ககாலப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணமுடிகிறது. இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால எழுத்து. மொழி, பண்பாடு என்பனவற்றை அறியப் பெரிதும் உதவுகின்றன, வரலாற்றாசிரியர்களில் பலர் இக்கல்வெட்டுக்களில் வரும் வடபிராமி எழுத்தும், வடமொழிச் சொற்களும் சிங்கள மக்களின் மூதாதையினர் வடஇந்தியாவில் இருந்து இலங்கைக்குப் புலம் பெயர்ந்ததற்கு ஒரு சான்றாகக் காட்டியுள்ளனர். ஆனால் இவை கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் பௌத்தமதத்துடன் அறிமுகமாவதற்கு முன்னர்த் தமிழகத்தில் இருந்து பரவிய எழுத்தும். மொழியும் இலங்கையில் புழக்கத்தில் இருந்ததற்கு இக்கல்வெட்டுக்களே சான்றாகும். இதில் தமிழ்மொழிக்கேயுரிய பட்டப்பெயர்கள். வம்சப் பெயர்கள். ஆட்பெயர்கள் உள்ளன. இப்பெயர்கள் சங்க இலக்கியத்திலும். தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் வரும் பெயர்களோடு பெருமளவு ஒற்றுமை உடையன. அவற்றுள் 'வேள்' என்ற பெயர்பற்றி ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

இலங்கைப் பிராமிக் கல்வெட்டு மொழிபற்றிய ஆய்வில் அறிஞர்கள் கவனத்தை ஈர்த்த ஒரு சொல்லாக வேள் காணப்படுகிறது. 1880இல் வடஇலங்கையில் பெரியபுளியங்குளக் கல்வெட்டில் இச்சொல்லை அவதானித்த எச். பாக்கர் இதை 'வேளா' என வாசித்து இரண்டாவதாக வரும் தமிழுக்குரிய 'எவைத் தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்ததற்குரிய சான்றாகக் காட்டினர் (Parkar 1909:43.6).இவரின் வாசிப்போடு உடன்படாத கோல்சிமித், முல்லர், எச்.சி. பெல் போன்றோர் இவ்வெழுத்தை அசோக பிராமிக்குரிய 'லு' எனக் கூறி இச்சொல்லை 'வேலு' என வாசித்தனர். இவர்களின் வாசிப்பே பொருத்தம் எனக் கூறும் எஸ். பரணவிதானா காகிதச்சுவடி ஆய்வுகள்

109