உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கல்வெட்டுக்களில் வரும் இச்சொல்லும் பாலி இலக்கியங்களில் வரும் 'வேளு என்ற சொல்லும் ஒன்றெனக் கூறினார். ஆனால் இலங்கையில் 'ள' எழுத்துப் பயன்படுத்தும் மரபு கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பின் ஏற்பட்டதெனக் கருதும் இவர் பாலி இலக்கியங்களில் 'லு'விற்குப் பதிலாக 'ளு' பயன்படுத்தப்பட்டது தவறு என்றார் (Paranavitana 1970: XXV). இதற்குச் சான்றாகத் தொடக்ககாலக் கல்வெட்டுக்களில் உள்ள கட (Kada), அடி (adi) போன்ற சொற்கள் கி. பி. 2ஆம் நூற்றாண்டின் பின் அளி (ali). களி (Kali) என மாற்றமடைந்ததைச் சான்று காட்டினார். ஆனால் தொடக்ககாலக் கல்வெட்டுக்களில் 'ல'வுக்குப் பதிலாக 'ட' பயன்படுத்தும் மரபு காணப்பட்டாலும் காலத்தால் முந்திய வட இலங்கைக் கல்வெட்டுக்களில் இரு எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதனால் பரணவிதானாவால் 'வேலு' என வாசிக்கப்பட்டதை 'வேள்' அல்லது 'வேளா' என வாசிப்பதே பொருத்தமாகும். இலங்கையில் அசோக பிராமிக்கு முன் தென் பிராமி எழுத்து புழக்கத்தில் இருந்ததாகக் கருதும் எஸ். கருணாரத்தினா கி. மு. 2ஆம் நூற்றாண்டில் 'எ' என்ற எழுத்து பயன்பாட்டில் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது (Karunavatna 1984:32).

ம்

தமிழ் நாட்டில் வேள்' என்ற சொல் கி. மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்து மாங்குளம். மேட்டுப்பட்டி, கரூர், மறுகால்தலை ஆகிய இடங்களில் உள்ள பிராமிக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தப்பட்டதைக் காணலாம் (Mahadevan 1966:61). இச்சொல் சங்க இலக்கியத்தில் வேள். வேளிர் எனப் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கைப் பிராமிக் கல்வெட்டில் உள்ள 'வேள்' என்ற தமிழ்ச் சொல்லின் வரலாற்று முக்கியத்துவத்தைச் சங்ககாலப் பின்னணியில் நோக்குவதும் அவசியமாகிறது.

தென்னியந்திய அரசத் தோற்றம்பற்றிய ஆய்வில் பிற குறுநில மன்னர்கள் பெறாத முக்கியத்துவத்தை வேளிர் பெறுகின்றனர். மூவேந்தர் ஆட்சிக்குட்பட்ட குறுநில மன்னர்களுள் இவர்கள் அரசியலிலும், சமூகத்திலும் மிகுந்த செல்வாக்குடன் விளங்கியதைச் சங்க இலக்கியத்தில் வரும் இளங்கோவேள். மாவேள் எவ்வி. நெடுவேள் ஆவி வேந்தரும் வேளிரும். இருபெரும் வேந்தரோடு வேளிர் போன்ற சொற்றொடர்கள் உணர்த்துகின்றன. வேளிர் என்பது வேள் என்பதன் பன்மை. சங்க இலக்கியத்தில் நன்னன்கங்கள், கட்டி. பரணன் போன்ற வேளிர்த் தலைவர்கள் பேசப்படுகின்றனர் (அகநானூறு செய்யுள் 44. 113, 325). ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேள் தலைவனாக இருந்திருக்க வேண்டும். அவனின் கீழ் வாழ்ந்த குடிகள் இரத்த உறவினால் பிணைக்கப்பட்ட ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். தமிழ் நாட்டிலுள்ள வேளாபுரம். வேள்கலிநாடு, வேள் நாடு. வேளூர் என்பன வேள் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடாக, ஊராக இருந்திருக்க வேண்டும். வேள் நாடு என்பது வேள் ஆட்சிக்குட்பட்ட நாடு என எ.சுப்பராயலு கூறியிருப்பது இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும் (Subarayalu. Chapter 1).

ஒரு

சங்க இலக்கியத்தில் வரும் தொன்முதிர் வேளிர் (புறம் 201: 11. 12). தொன்று முதிர் வேளிர் (புறம் 24. 21) பற்றிய சான்றுகள் தமிழகத்தின் மிகத் தொன்மையான இனக்குழுக்களில் ஒன்றாக வேளிரைக் கருத இடமளிக்கிறது சிந்துவெளியில் இருந்து கி. மு.800 அளவில் தென்னகம் வந்து குடியேறியவர்களே வேளிர் என்பது

110

காகிதச்சுவடி ஆய்வுகள்