உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்.சுப்பிரமணியத்தின் கருத்தாகும் (Subramanian 1961 : 258). இவர்களின் வழி வந்தவர்களே பிற்கால வேளார் என எ.மு. ஆராக்கியசாமி கருதுகிறார். தக்காணத்தில் அறுநூறு ஆண்டுகள் சிறப்புற்று விளங்கிய சாளுக்கியரை வேளிர் என்று பிங்கலநிகண்டும். வேள்புல அரசர் எனத் திவாகரமும் வேள் குலச் சாளுக்கியர் எனச் சோழக் கல்வெட்டும் கூறுகின்றன. இதற்குத் தமிழ் நாட்டிற்குரிய வேளிர் தமிழகத்திற்கு வெளியேயும் பரவியதே காரணம் என கிருஷ்ணசாமி ஐயங்கார் விளக்கம் கூறுகிறார் (Aiyangar, 1941 : 11). தமிழகத்தில் இருந்தே இலங்கைக்குப் பெருங்கற்காலப் பண்பாடு பரவியதென்ற கருத்துடைய செண்பகலட்சுமி வேளிரின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்துகிறார். இப்பண்பாட்டில் பயன்படுத்தப்பட்ட கறுப்பு - சிவப்பு மட்பாண்டங்கள் தமிழ் நாட்டிற்குரிய சிறப்பம்சம் எனக்கூறும் இவர் வேளாண்மையுடன் தொடர்புடையவர்களே இப்பண்பாட்டை உருவாக்கியவர்கள் எனக் கூறி வேளிர் வாழ்ந்த இடங்களுக்கும். இப்பண்பாட்டுச் சின்னங்கள் காணப்படும் இடங்களுக்கும் இடையிலான ஒற்றுமையைத் தொடர்புபடுத்தலாம் என்றார் (Champakalakshmi 1978 : 52). எஸ். செனிவரட்னா வேளிர் வாழ்ந்த இடங்களுக்கும் பெருங்கற்கால ஈழத்தாழிகள் காணப்படும் இடங்களுக்கும் இடையிலான ஒற்றுமையைச் சுட்டிக் காட்டியுள்ளார் (Serivaratne 1993: 70).கா.இராஜன் பெருங்கற்கால நடுகற்களுக்கும் வேளிர் தோற்றத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்பதற்குச் செங்கம். தருமபுரி நடுகற்களைச் சான்றாதாரம் காட்டுகிறார் (Rajan, 1996:220)

சங்க இலக்கியத்தில் வேளிர் வேளாண்மையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறுவதற்குச் சான்றுகள் மிகக்குறைவு. மாறாகக் கால்நடை வளர்ப்பிலும் பெருமளவு போர் நடவடிக்கையிலும் ஈடுபட்டதற்கே சான்றுகள் அதிகம். போர்க் காலங்களில் பங்கெடுத்த வேளிர்பற்றிச் சங்க இலக்கியம் கூறும்போது ஐம்பெரும் வேளிர், பதினொரு வேளிர் எனக் கூறுவதைக் காண்கிறோம் ( அகநானூறு 36, 135 கரிகாற் சோழன் பதினொரு வேளிர்களுடன் போரிட்டான் என அகநானூறு கூறும். எனவே பெருங்கற்காலப் பண்பாட்டில் வேளாண்மையில் ஈடுபட்ட மக்களை வேளிருடன் தொடர்புபடுத்துவது பெருமளவு பொருத்தமாகத் தெரியவில்லை. றோமிலாதபார் வேளாண்மை மக்களும், போர் மறவரும் இருபிரிவினராக இருப்பினும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்தனர் என்றார். இதில் வேளாண்மையில் ஈடுபட்ட மக்களைப் பாதுகாக்கும் போர் மறவராக வேளிர் இருந்திருக்கலாம் (Thapar 1954:32)

வேள். வேளிர் என்ற சொல் குலம் குறித்து வந்த பெயர்கள் அல்ல ஒரு பட்டப் பெயர் என்ற கருத்துண்டு. சங்க இலக்கியத்தில் வேள் என்ற சொல் குறிப்பிட்ட ஒரு குலத்தைக் குறிக்காது ஆய், மலையமான். போசானியர் குலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை சான்றாகக் காட்டப்படுகிறது (பூங்குன்றன் 1989 : 220). உலகில் 'ஆநிரை கவர்தல்' மக்களிடையே ஏற்பட்ட போட்டி, பூசல்களிடையே தலைமை தாங்கி நடத்திய தலைவன் காலப்போக்கில் குலத்தலைவனாக நிலை பெற்றான். இதில் தெளிந்த சிந்தனையும், வலிமையும், வீரமும் உள்ள தலைவன் பெற்ற பெயர்களில் ஒன்றே வேள் எனக் கருதப்படுகிறது. ஆநிரை கவர்தல் ஆப்பிரிக்கக் கால்நடை வளர்ப்பாளரிடையேயும், வேதகாலக் கால்நடை மேய்ப்பாளரிடையேயும் காகிதச்சுவடி ஆய்வுகள்

111