உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காணப்பட்ட பொதுவான அம்சம் எனக்கூறும் றோமிலா தபார் வடமொழியில் ராஜா என்பவன் ஆகோள்பூசல் தலைவனாகக் கூறப்படுகின்றான் என்றார் (Thapar 1984: 24). மூலத் திராவிட மொழியில் வேள்'என்பதற்கு விருப்பம். தலைமை. ஒளிவிடு என்ற பொருள் உண்டு. ஏறத்தாழ இதே கருத்தை வடமொழி ராஜாவும் கொண்டிருப்பதால் இரண்டும் தலைவன் என்ற கருத்தைக் கொண்டதாகக் கருதலாம். ஆர். எல்மன் இனக்குழு வாழ்க்கையில் இருந்து அரசு உருவாகும் போது இடைக்கட்டமாக வேள் இருந்ததென்றார் (Elman. 1975 : 37). தொடக்க காலத்தில் சமூகத்தில் தலைமை தாங்கியவனை வேள் குறித்து நின்றாலும் காலப்போக்கில் வேள் வழி வந்தவர்கள் தம்மை வேள் குலமாகக் கருதியிருக்க இடமுண்டு. இதையே சங்க இலக்கியத்தில் வரும் வேள் குலம், வேள்குடி போன்ற சொற்கள் உணர்த்துகின்றன. இது முதலியார் பட்டம் பெற்ற ஒருவரின் வழி வந்தவர்கள் பிற்காலத்தில் தம்மை முதலியார் குலம் எனக் கூறிக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.

இலங்கையில் வேள் என்ற சொல் 21 கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஆ. வேலுப்பிள்ளை மேலும் 5 கல்வெட்டுக்களில் இச்சொல் தவறாகச் சுலு (Sulu) என வாசிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார் (Veluppillai 1980:12). இச்சொல் வடமொழி Vailva என்ற சொல்லின் அடியாகத் தோன்றியதெனக் கூறும் பரணவிதானா இது தனி நபர் (Personal name) பெயரைச் சுட்டுகின்றதென்றார். இதையொரு திராவிடச் சொல் எனக்கூறும் செனிவரட்ன இதற்குச் சார்பாகத் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் சங்க இலக்கியத்திலும் வரும் பெயரைச் சான்றாகக் காட்டுகிறார் (Senivaratna 1985 : 59). எச். டபிள்யு. எல்லாவலா தமிழில் வேல் என்பது முருகனோடு தொடர்புடையதால் கல்வெட்டுக்களில் வரும் 'வேலு' 'வேலுஸ' என்ற பெயர்கள் முருகனைக் குறிப்பதாகவும். இவை சிங்கள மக்கள் சைவ மதத்தைப் பின்பற்றியதற்குச் சான்று எனவும் கூறுகிறார். சங்க கால 'வேள்', 'வேளிரும் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் வேளும் ஒன்றெனக் கூறும் சி. க. சிற்றம்பலம் இது வேள் குலத்தைக் குறிப்பதாகவும். இதன் அடியொற்றித் தோன்றியதே பிற்கால வேளாளர் எனவும் விளக்கம் கொடுத்துள்ளார் (சிற்றம்பலம் 1993 : 546), சங்க காலத்தில் புழக்கத்தில் இருந்த வேள்' என்ற தமிழ்ச் சொல்லே சமகாலத்தில் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது எனக் கூறலாம். ஆனால் தமிழ் நாட்டில் முதலில் தலைவனைக் குறித்த 'வேள்' என்ற சொல் வேள்குலம், வேள்குடி என அழைக்கப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதுபோல இலங்கையில் இதுவரை கிடைக்கவில்லை. குலம்). குடி போன்ற சொற்கள் கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும் அவை வேள் என்ற சொல்லுடன் இணைந்து வந்ததற்குச் சான்றில்லை. கி. மு. 1ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கல்வெட்டுக்களில் வரும் இச்சொல் பிற்பட்ட கல்வெட்டுக்களில் படிப்படையாக மறைந்து போகிறது. இதனால் 'வேள்' என்ற சொல்லுக்கும் பிற்பட்ட கால வேளாளருக்கும் இடையிலான தொடர்பை உறுதிப்படுத்த மேலும் சான்றுகள் தேவை.

சங்க இலக்கியத்தில் குறுநில மன்னர் பெயரின் பின்னொட்டுச் சொல்லாக வரும் இச்சொல் சில குறுநில மன்னர் பெயரில் முன்னொட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டதற்கு வேள் எவ்வி. வேள் பேகன். வேள் ஆய். வேள் பாரி. நெடு வேள், ஆதன் போன்ற மன்னர்களின் பெயரைக் குறிப்பிடலாம் (புறம். 24:18. காகிதச்சுவடி ஆய்வுகள்

112