உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அகம் 61: 15. புறம் 105 : 815 : 12). இச்சொல் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் பெரும்பாலும் பின்னொட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டொன்றில் சுமண என்ற பெயரின் முன்னொட்டுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது (Paranavitana, 1970 : 647). இவ்விரு சொற்களும் (வேள். சுமண) தனியாகவும் இணைந்தும் (வேள். சுமணா கல்வெட்டுக்களில் வருவதுபோல் மகா வம்சம் மனோரதபுரானி (Manorathapurani) சபஸ்ஸவன்டு (Sabassavanhu). ராஜவாகினி (Rajavahini) முதலான பாலி நூல்களிலும் வருகின்றன (Ellwala 1969:61. 112,115). மன்னர்களினதும், அரசத் தலைவர்களினதும் வரலாற்றை முதன்மைப்படுத்திக் கூறும் பாலி இலக்கியங்களில் வேளுசு மண படைத் தளபதியாக. வணிகத் தலைவனாக. அரச வருவாய் பெறும் அதிகாரியாக. மன்னனாக வரக்கூடிய தலைவனாகக் கூறப்படுகின்றனர். இதனால் சுமண என்ற பெயரில் முன்னொட்டுச் சொல்லாக வரும் வேள் என்ற சொல்லை ஒரு பட்டப் பெயராகப் பயன்படுத்தப்பட்டதெனக் கருத இடமுண்டு.

மகாவம்சம் கிரி மாவட்டத்தைச் சேர்ந்த வேளுசுமண சிறந்த குதிரை ஓட்டியெனக் கூறுகிறது. ராஜாவாகினி என்ற நூலில் வெளிநாட்டில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்பவனாக வேளு சுமணவைக் குறிப்பிடுகிறது (Ellawala 1969: 61, 115). பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட போட்டி இரு குழுக்களிடையே தலைவர்கள் தோன்றவும். அவை அரசு உருவாகவும் காரணமாக இருந்தன. இலங்கையின் தொடக்ககாலப் பொருளாதார நடவடிக்கையில் வெளிநாட்டு வர்த்தகமும் முக்கியப் பங்கு வகித்தன. இலங்கையின் தொடக்க கால நகரமயமாக்கத்திற்குத் தென்னிந்தியா ஊடான மேற்காசிய வர்த்தகமே காரணம் எனக் கூறப்படுகிறது. இவ்வர்த்தகத்தில் முத்து ஏற்றுமதிப் பொருளாகவும். குதிரை முக்கிய இறக்குமதிப் பொருளாகவும் திகழ்ந்தன. அநுராதபுரத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் 'பதவேள்' என்ற சொல் காணப்படுகிறது (Paranavitana 1970: 121) இதைப் பரதவ குலத்துக்குரிய வேள் என எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இப்பரதவ குலம் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டதற்குத் தெளிவான சான்று உண்டு. இக்கல்வெட்டு இக்குலத்துக்குரிய வர்த்தகத் தலைவன் 'வேள்' அழைக்கப்பட்டதை உறுதிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.

என

சங்க இலக்கியத்தில் வேள். வேளிர் போர் மறவர்களாகப் பல இடங்களில் வருணிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் கொடயவேள்' என்ற சொல் காணப்படுகிறது. கொடய என்பதைக் கோட்டை என மொழி பெயர்த்த பரணவிதானா இச்சொல்லின் மூலம் வடமொழி 'கொஸ்டிகா' எனக் கூறிக் கொடயவேள்' என்ற சொல்லுக்குக் கோட்டையின் படைத் தளபதி வேலு என விளக்கம் கொடுத்துள்ளார் (Paranavitana 1970: 778). வேலு' என்பதைத் தமிழ்ச் சொல்லான 'வேள்' எனக் கூறும் வேலுப்பிள்ளை 'கொடய' என்ற பிராகிருதச் சொல்லைத் தமிழில் 'கோட்டை' என விளக்கம் கொடுக்கிறார் (Veluppillai 1981:13). எல்லாளன் துட்டகாமினி போராட்டத்தில் துட்டகாமினி படையில் இருந்த தளபதியாக 'வேளுசுமண குறிப்பிடப்படுகிறான். இவ்வாறான தளபதிகள். தலைவர்கள் எல்லாளன் படையிலும் இருந்ததாகத் தெரிகிறது. துட்டகாமினி எல்லாள வெற்றி கொள்ளு முன் அவனுக்குச் சார்பான 32 தமிழ்ச் சிற்றரசுகளை (தலைவர்களை) வெற்றி காகிதச்சுவடி ஆய்வுகள்

113